பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

சாலைகள் காட்சி அளித்தன. சங்கப் புலவர் இனி திருந்து தமிழ் ஆராய்ந்து வந்த மண்டபம் வானுற ஓங்கி வளம்பெற இருந்தது. அரசனது கோவில் நகரத்தின் நடுவிடத்தில் நடுநாயகமாக விளங்கியது. அதனைச்சூழ அமைச்சர், சேனைத்தலைவர் முதலிய அரசியல் அலுவலாளர் தெருக்கள் இருந்தன. மணத்தைமகிழ்விக்கும் மணமிகு பூஞ்சோலைகள் அங்கங்குக் காட்சி அளித்தன. அச்சோலைகளில் மாலை நேரங்களில் மாநகரத்து ஆடவரும் பெண்டிரும் அன்புடன் அமர்ந்து நற்காற்று நுகர்ந்தனர்.

கடைத்தெரு

மதுரை மாநகரத்துக் கடைத்தெரு மிக்க சிறப்புடையதாகும். அங்கு பலவகை வண்டிகள் செய்து விற்கப்பட்டன. போர் வீரர் அணியத்தக்க கவசங்கள் விற்கப்பட்டன; சீனம் முதலிய வெளிநாடு களிலிருந்து கப்பல்களில் வந்த பட்டுவகைகளும் நவமணிவகைகளும் விற்கப்பட்டன; குந்தம், வேல், வாள் முதலிய பலவகைப் போர்க்கருவிகள் விற்கப்பட்டன; அகில், சந்தனம், குங்குமம், கஸ்தூரி முதலிய வாசனைப் பொருள்களை விற்கக் கடைகள் இருந்தன. பலவகைப் பூக்களைக் கொண்டும் ஒரே வகை மலர்களைக் கொண்டும் பலவகை மாலைகளைக் கட்டி விற்ற கடைகள் காட்சி அளித் தன நெல், தினை, சாமை, தோரை, சோளம், கேழ்வரகு முதலிய கூலவகைகளை விற்ற கடைகள் பல இருந்தன. எள், நெய், தேங்காய், நெய், முத்துக்கொட்டை நெய், பசு நெய் முதலியன விற்கும் நெய்க்கடைகள் பல இருந்தன. பொன்னைக் கொண்டு பலவகை நகைகளைச் செயது