பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

கொண்டு குமரித்துறையில் நீராடி மதுரையை அடைந்தான். கோவலன் அவனை வணங்கினான்: அம்மறையவன் பூம்புகாரைச் சேர்ந்தவன். அம் மறையவன் கோவலனை ஆசீர்வதித்தான்; ஆசீர்வதித்து அவனை அன்புடன் நோக்கி, “உனக்கு மாதவியிடம் பிறந்த பெண் குழந்தைக்கு மணிமேகலா தெய்வத்தின் பெயரை இட்ட அறிஞனே, நீ வாழ்வாயாக!” நீ இப்பிறவியில் செய்த அரிய செயல்கள் பல. மணிமேகலைக்குப் பெயர் வைத்துக் கொண்டாடிய அன்று மறையவர்க்குப் பொன் தானம் செய்தனை. அம்மறையவருள் ஒருவன் முதியவன். அவன் தள்ளாடிச் சென்று கொண்டிருந்தான்; அப்பொழுது மதயானை ஒன்று பாய்ந்து வந்து அவனைத் தூக்கிச் சென்றது மறையவன் அலறினான். நீ அவனது ஆபத்தான நிலையைக் கண்டு, உடனே பாய்ந்து யானையை அடக்கி அதன் மீது ஏறி அமர்ந்தனை, அமர்ந்து மறையவனை யானைக் கையிலிருந்து காப்பாற்றினை, அச்செயல் செயற்கரும் செயல் ஆகும்.

“மற்றொரு நாள் கீழ் மகன் ஒருவன் பத்தினி ஒருத்தி மீது பொய்ப்பழி கூறினான். அதனை நம்பிய அவள் கணவன் அவளை வெறுத்தான். இங்ஙனம் கணவன்-மனைவியர்க்குள் குழப்பம் உண்டாக்கிய அக்கீழ் மகனை ஒரு பூதம் பற்றித் துன்புறுத்தத் தொடங்கியது. அது கண்ட நீ அவன் படும் துன்ப நிலையைக் காணப்பொறாமல், அப் பூதத்தை நோக்கி ‘என்னைப் பற்றிக் கொண்டு அவனை விடுக’ என்றனை. அப்பொழுது அப்பூதம் கோவல, நீ நல்லவன். இவன் தீயவன். இவனைப்-