பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை. எஸ். ஆறுமுகம் Δ 9




சமூகத்தின் ஆன்மாவெனப் பெருமையுடனும் பெருமிதத்துடனும் பேசப்பட்டு வருகிற தமிழ் எழுத்துலகிலே, குறுக்கு வழிப் புத்தி படைத்த பத்திரிகை ஆசிரியர்கள் சிலரின் அசட்டுத் தைரியத்தில், புல்லுருவித் தமிழ் எழுத்தாளர்களும் எழுத்தாளிகளும் அசட்டுத் தைரியம் அடைந்து, அவர்களது சுயநலக்கேட்டின் எதிர் விளைவாகவும், கெட்ட விளைவாகவும் உருவான அல்லது, உருவாக்கப்பட்ட மரபு தாண்டிய-பண்பாடு மீறிய—முரண்பட்ட எழுத்துக்களைக் கதையெனவும் தொடர் கதையென்றும், நவீனமென்பதாகவும் பெயர் சூட்டிச் சிவப்புச் சிவப்பாகவும் பச்சை பச்சையாகவும் எழுதித் தள்ளி, புதிய அலைப்புரட்சி என்னும் போலித்தனமான புசழ் மயக்கத்திலேயே தங்களுடைய ஈனத்தனமான வயிற்றுப் பிழைப்பை வெகு நாகரிகமாகவே நடத்தவும் துணிந்தனர்.

சமுதாய விரோதிகளான, சமூகத்தின் எதிர்ச்சக்திகளான இந்த நாலு எழுத்தாளர்கள் வெளிப்படுத்திய அநாகரிகச் சமூக நச்சுப் பூச்சிநோய், ஏலக்காயின் நறு மன இன்சுவைப் படைப்பின் இலக்கியத்தைப் பற்றியும் தொற்றியும் சீர்கெட வைத்ததோடு நிற்காமல், நல்ல, பொன் மனம் படைத்த இளந்தலை முறையினரையும் சீரழியச் செய்து விட்டது !
இலக்கியத்தின் புலன் விசாரணை !

மனித குலம் மேன்மையும் மேம்பாடும் அடையத்தக்க புதுக்கருத்துக் கோட்பாட்டின் வழி முறைகளிலே புதியதொரு தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்கிப் பேணிக்காத்து வாழ்த்தும் சீரிய நோக்கம் கொண்டு, தமிழ்ப் படைப்பிலக்கியம் மக்கள் இலக்கியமாக மலர்ச்சியடைந்து மறுமலர்ச்சியடைந்து, நவநாகரிகப் பண்பாடு வாய்ந்த நெறிமுறையிலே அறிவின் முனைப்போடும் உணர்வின் விழிப்போடும் வாழ்வும் வளமும் பெற்று நாளும் பொழுதும் வளர் பிறையாக வளர்ச்சியடைந்து