பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை. எஸ். ஆறுமுகம் Δ 11



தூய்மைக்கேடு, இன்றைய நிலையில் உலகத்தையே அச்சுறுத்தும் பயங்கரமானதொரு வாழ்க்கைப் பிரச்னையாகவே ஆகிவிட்டது! தூய்மைக்கேடு, வாழ்க்கைக்கு மட்டும் சவாலாக அமையவில்லை; வாழ்க்கையைப் பிரதி பலிக்கவல்ல இலக்கியத்திற்கும் சவாலாக அமைந்து விட்டது!

இப்படிப்பட்டதொரு சோதனைக் கட்டத்திலேதான், இலக்கியத்தை, நாவல் இலக்கியத்தைப் புதிய அலை என்னும் பெயரால் சோதிக்கத் துணிந்த அந்தச் சுஜாதா, இந்துமதி, புஷ்பா தங்கத்துரை, சிவசங்கரி ஆகிய நாலு பேர்களையும் அக்குவேறு, ஆணிவேறாகச் சோதிக்கவும் தலைப்பட்டேன்! என்னுடைய இப்பரிசோதனையில், நீதி விசாரணையில் கையும் களவுமாகப் பிடிபட்ட காயத்ரி’ ‘மணல் வீடுகள்’, ‘ஒரு சிங்கம் முயலாகிறது!’, ‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது போன்ற நாவல்கள் தமிழ்ச் சமுதாயத்துக்கு இழைத்த பண்பாடு தவறிய, மனிதாபிமானம் இழந்த, தருமம் சிதைந்த அநீதியையும் அநியாயத்தையும் பாவத்தையும் பாரம்பரிய பெருமை பூண்ட நமது அருமைத் தமிழ்ச் சமூகத்தின் முன்னிலையிலேயே அம்பலப்படுத்தவும் செய்தேன். எச்சில் புத்தியும் ஈனத் தனமும் படைத்த மஞ்சள் இலக்கியத்தின் முடிசூடா மன்னர்களையும் முடி சூடிய மன்னிகளையும் எழுத்துச் சமூகத்தின் புல்லுருவிகளென இனம் காட்டி, அவர்களுடைய உண்மையான சுயருபத்தை இந்தச் தமிழ்ச்சாதி உண்மையாக அறிந்துணரவும், உணர்ந்தறியவும் தங்க மானதொரு சந்தர்ப்பம் உண்டாகவும் செய்தேன்.

ஆபாசமற்ற, பரிசுத்தமான, நல்ல இலக்கியம்தான் மக்கள் சமுதாயத்தை வாழவைக்க முடியுமென்ற இலக்கியப் பூர்வமான நன்னம்பிக்கையிலும், மக்கள் இலக்கியத்திற்குப் புதுவாழ்வு பிறக்க வேண்டுமென்ற மனப் பூர்வமான அக்கறையிலும், நான் ஆரம்பித்துத் தொடர்ந்து முடித்த மேற்கண்ட இலக்கியத் திறனாய்வுத் தொடர்,