பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14 Δ ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை




முதல் நூலாக வெளிப்படுத்தப்பட்ட திறனாய்வுத் தொடரில் அமரர் கல்கி (‘அலை ஓசை’), நா. பார்த்த சாரதி (‘குறிஞ்சிமலர்’, ராஜம் கிருஷ்ணன்(‘மலையருவி’), க. நா. சுப்பிரமணியன் (‘நளினி’), ஆர். ஷண்முக சுந்தரம் (‘அறுவடை’), கோவி. மணிசேகரன் (செம் பியன் செல்வி'), அமரர் விந்தன் ('பாலும் பார்வையும்"), மு. கருணாநிதி (‘வெள்ளிக்கிழமை’), மற்றும் அகிலன் ('பாவை விளக்கு') ஆகிய நாவலாசிரியர்கள் இடம் கண்டனர்; இடம் பெற்றனர்.

நாவல் இலக்கியத்தில் ‘தேக்கம்’ ஏற்பட்டுவிட்டதாக அன்றைக்குக் க.நா.சு. சொன்னது, இட்டுக்கட்டிச் சொன்ன பொய் என்பது, என்னுடைய திறனாய்வுத் தொடர் ‘உமா’வில் வெளியான அந்தக் காலத்திலேயே நிரூபணம் ஆகிவிட்டது! மேலும், இலக்கியத் திறனாய்வு நூலாக உருப்பெற்ற ‘கல்கி முதல் அகிலன் வரை’ என்னும் என் நூல், உயிரும் உயிர்ப்பும் கொண்ட நாவல் இலக்கியத்தின் மெய்யான வளர்ச்சிக்கு ஜீவாதாரமானதொரு மெய்ச் சாட்சியமாகவும் அமைந்து விட்டது அல்லவா ?

தமிழ்ப் பெருங்குடி மக்களை நல்வழிப்படுத்தி, அவர்களைப் பேணிக்காக்கும் சமுதாயக் கடன் கொண்ட மக்கள் இலக்கியத்திற்குப் புத்துயிரும் புது ரத்தமும் புது வாழ்வும் புத்தொளியும் வழங்கும் வகையிலே, இப்போது ஜனநாயக தருமத்தின் அரசியல் சட்டமும் விழிப்புடன் செயலாற்றத் தொடங்கியிருக்கிறது.

இந்த நல்ல நேரத்தில், நமது பவித்திரமான பாசத்துக்கும் தேசத்துக்கும் பாத்திரமான நம்முடைய அன்பான தமிழ்ச்சமுதாயத்தை வாழவைத்து,வாழ்த்துக் கூறும் சீரிய நோக்கத்துடன் தமது எழுத்துக்களைப் புதுமையின் எழில் குலுங்கவும் புரட்சியின் கனல் தெறிக்கவும் ஆரோக்கியப் பண்பின் நெறிமுறையில் இயங்கியும் இயக்கப்பட்டும்