பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை. எஸ். ஆறுமுகம் Δ 17



காலங்கள் மாறுகின்றன ; மாறின. ; மாறும்.

கங்கா இப்பொழுது மாறிவிட்டாள்; ஆளே அடியோடு மாறி விட்டாள் ! உண்மைதான்!- கங்கா தனி மனிதப் பிரதிநிதிதான் ! அதனால்தான், அவளால் இப்போது அடியோடு மாற முடிந்திருக்கிறது !- மாற்றம் என்றால், அற்பசொற்பமான மாற்றமா ? “... ஒரு கையிலே பாட்டில் , ஒரு கையிலே கிளாஸ். ஸாரி (புடவை). இல்லாம, வெறும் பெட்டிகோட் டோட நான் நிக்கற இந்தக் கோலத்தைக் கண்ணாடியிலே பார்க்கறேன். இது வரைக்கும் இருந்த கங்காவுக்கு நான்'குட் பை” சொல்வி ரொம்ப நாழி ஆயிடுத்து!... மருந்து குடிக்கிற மாதிரி ஒரே மூச்சிலே... ஐயோ ! தொண்டையெல்லாம் வயிறெல்லாம், குடலெல்லாம், நெஞ்சமெல்லாம் எரியறதே ?" கங்காவின் வாக்குமூலம் இது !...

எரியட்டும், எரியட்டும் !...

கங்கா பொய் சொல்ல மாட்டாள் !--ஏன், தெரிகிறதா ?- அவள் தனி மனிதப் பிரதிநிதி வயிறு எரிந்ததோ, என்னவோ ?- நெஞ்சம் எரிந்திருக்கும் ; கட்டாயம் எரிந்திருக்கத்தான் வேண்டும்.

வாழ்க்கை ஒரு விபத்து !

கற்பும் ஒரு விபத்துத்தானோ ?...

அந்த விபத்தே வாழ்க்கையாக ஆகிவிடுகிற-ஆகி விட்ட துர்ப்பாக்கியத்தைச் சந்திக்கும் பாவத்தைச் சுமக்க, நேர்ந்த கங்கா, அவ்விபத்து நடந்து பன்னிரண்டு ஆண்டுகள் கழித்தும்கூட, உயிரையும் சுமந்து கொண்டிருக்கிறாளென்றால், அவள் தனிமனிதப் பிரதிநிதியாகத்தானே இருக்க வேண்டும் ? மது மாத்திரம் இந்த மங்கையை என்ன செய்துவிட முடியும்?