பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26 Δ ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை



சிந்தனைகளை விருந்துக்கு அழைக்கும் கேள்விகளுக்கான பதில்கள் நல்லதோர் இலக்கிய விருந்தை வழங்கவே செய்யும் !...

தமிழ் இலக்கியத்தில், படைப்புத் துறை :

இன்றையத் தமிழிலே, - படைப்பு இலக்கியம் (Creative Literature) எங்கே போய்க் கொண்டிருக்கிறது ?

இது பற்றிச் சுதந்திரம்’ என்னும் வார ஏட்டில், 1981 காலக் கட்டத்தில் தொடர்ந்து எழுதினேன். கட்டுரைத் தொடரை நான் ஆரம்பம் செய்து வைத்த, விதம் இப்படியாகவே அமைந்தது :

“மனிதச் சமுதாயத்தைப் பண்போடும் அன்போடும், பரிவோடும் பாசத்தோடும், அபிமானத்தோடும் ஆதரவோடும் நல்வழிப்படுத்தவல்ல, அந்தரங்கப் புனிதம் படைத்த ஒரு படைப்பாளன் தான் சமுதாயத்தின் உண்மையான ஆன்மாவாகத் திகழ முடியும் !-சமுதாயத்திற்கு விடி மோட்சம் ஏற்படுகிற முறையிலும், சமுதாயத்திற்கு விடிபொழுதை ஏற்படுத்துகிற நெறியிலும், சமுதாயத்திலே புரையோடிக் கிடக்கின்ற பிரச்சினை களுக்கு மனிதாபிமானத்துடனும் தன்மானத்துடனும் தீர்வு கண்டு வெற்றி பெற முயலும் அந்தத் தார்மிகப் பொறுப்புணர்ச்சியின் மூலம் தான் உண்மையான எழுத்தாளன் இந்தச் சமுதாயத்தின் மத்தியிலே பவித்திரமான பெயரோடும், சாசுவதமான புகழோடும் நிலை பெற்று விளங்க முடியும் !-அப்போது தான், இரண்டாவது பிரம்மா என்கிற அசல் அந்தஸ்துக்கும் மரியாதைக்கும் மதிப்புக்கும் அந்த எழுத்தாளன் நாணயமாகப் பாத்திர மாகவும், நாணயமான பாத்திரம் ஆகவும் முடியும்...”

இல்விதியின் அடிப்படையிலும் ஆதாரத்திலும், மேலே எழுப்பப்பட்ட விடை தேடும் வினாக்கள் இரண்டையும் திரும்பவும் திரும்பிப் பார்க்கலாமா ?