பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை. எஸ். ஆறுமுகம் Δ 29




கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறான் ; அவளைச் சமுத்திரத்தில் கொண்டு போய்த் தள்ளிவிடத் துடிக்கிறாள் அம்மா, வக்கீல் மாமா குறுக்கிடவே, அவள் தஞ்சை, திருச்சி, சிதம்பரம் என்று ஊர் சுற்றி, கெட்டும் பட்டணம் சேர் என்கிற அனுபவ மொழியை மெய்ப்பிக்கவும் இணங்கியவளாக, மறுபடி பட்டணம் வந்து சேர்கிறாள்.

‘'வேலை கிடைக்கிறது , வள்ளிசாகப் பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து, வெங்கு மாமா போட்ட ஒரு சவாலை ஏற்று, அவளை—தன்னைக் கெடுத்த அவனை-அந்தப் பெரிய இடத்துப் பிரபுவை மீண்டும் கங்கா தேடிக் கண்டு பிடித்து விடுகிறாள்.

‘பத்மாவின் புருஷன் அவன் என்பதும் மஞ்சுவின் அப்பன் அவன் என்கிறதும் தெரிய வருகின்றன.

‘என்றாலும், இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளாக எந்தப் பிரபுவையே சதாசர்வ காலமும் நினைத்துக் கொண்டிருந்தாளோ, அதே பிரபுவை அவள்-கங்கா உள்ளத்தாலும், உயிராலும், ஆத்மாவினாலும் உண்மையாகவும் நேர்மையாகவும் நேசிக்கிறாள். “இவரை (பிரபு) விட, எனக்குப் பிடிச்ச இன்னொரு புருஷன் இருக்கவே முடியாது !.-எஸ். ஐ லவ் ஹிம் !...’

ஆனால், பிரபுவோ கங்காவுக்கு ஒரு கலியாணத்தைப் பண்ணிப் பார்த்துவிட வேண்டு மென்று தவிக்கிறான்: துடிக்கிறான்.

“கங்காவிடம், நீ எவனுக்கோ வைப்பாட்டின்னு பேர் எடுத்துண்டு திரியறே ; அதை மாத்தித் தொலைக்கணுமேன்னு தான் இவ்வளவு