பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 Δ ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை




தூரம் பிரயாசைப் படறோம்’ என்று சொல்லி அவளைப் பெற்றவளும் அவளோடு உடன் பிறந்தவனும் அதற்காகப் பட்டபாடுகள் வியர்த்தமா கின்றன.

‘விளைவு : பூஜ்யம் !

கங்காவினால் பிரபுவை மறக்க முடிய வில்லை.

ஆனால், பிரபுவோ அன்றைக்குக் கங்காவை மறந்துவிட்ட மாதிரி, இன்றைக்கும் மறந்து விடுகிறான்: “குட் பை !” -

‘முடிவில்:

கங்காவுக்கு விஸ்கி'தான் துணை நிற்கிறது. ஆமாம்.

“அவள் இப்போது அடியோடு மாறி விட்டாள்—!”

கதை இவ்வளவுதான் ! கங்காவைப் போலவே, அவள் கதையும் சிறிது!-கற்பு நிலை பிறழ்ந்ததால் வந்த வினை இது ; விதி இது ; விளையாட்டு இது.

கங்காவைப் பொறுத்த அளவில், ஆண்டவன் தனது சிருஷ்டி விளையாட்டில் வெற்றி பெற்று விட்டான் என்பதுதான் சத்தியம். சத்தியத்திற்கு வக்கிரம் தெரியாது !

ஆர்.கே.வி. என்னும் எழுத்தாளராகக் கூடு விட்டுக் கூடு பாய்ந்து, ஜே.கே. இப்படியாகத் தானே கங்காவை வருணிப்பார்: “அவளைப் பார்க்கிற யாருக்கும் எளிமையாக அரும்பி உலகின் விலை உயர்ந்த எத்தனையோ பொருள் (ட்)களுக்கு இல்லாத எழிலோடு திகழும் புதிதாய் மலர்ந்துள்ள ஒரு புஷ்பத்தின் நினைவே வரும்.