பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34 Δ ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை




“நோ... நோ... அப்படியெல்லாம் இல்லை. உன்னோட டெலிஃபோன்லே பேசினத்துக்கும் இப்போ உன்னைச் சந்திச்சதுக்கும் நான் சந்தோஷப்படுறே... நான் சந்திச்சு என்னோட காரிலே வந்த எத்தனையோ போலே நீ ஒருத்தி இல்லேன்னு எனக்கு அப்பவே தெரியும். தெட் இஸ் வய் ஐ ஃபெல்ட் கில்டி. நான் உன்னை நினைக்கக் கூடாதுன்னே நினைக்காமல் இருந்தேன் ; அந்தஈ வினிங்கோடே நான் உன்னை மறந்துடறது நல்ல துன்னு மறந்துட்டேன். நான் உனக்கு ஒரு உண்மையைச் சொல்லட்டுமா ?... என் லைஃப்லே, நான் கெடுத்த ஒரே பெண் நீ தான் மத்தவங்க எல்லாம் ஏற்கெனவே கெட்டுப் போனவங்க !’

கங்கா கைக்கு மெய்யாக வாக்கு மூலம் சமர்ப்பிக்கிறாள் ; சிகரெட்டைப் பலமா உறிஞ்சிப் புகைவிடறார்; புகை காரமோ என்னமோ, கண்னெல்லாம் கலங்கறது ; தொண்டையைச் செருமிக்கிறார். என்னைப் பார்க்க முடியாம வெளியே பார்க்கறார். நானும் இந்தப் பக்கம் திரும்பிக்கிறேன் !...”

கங்காவின் விமரிசனச் சாட்சியத்துக்கு அவசியம் இல்லாமலும், நெஞ்சாரப் பொய் சொல்லாமலும், தனது இதயத்தின் பாவமன்னிப்புக் குரல் வாயிலாகவே பிரபுவை, மிஸ்டர் பிரபுவாக உயர்த்தும் கட்டம் இது ஒன்றுதான் ! - -

‘என் வாழ்க்கையிலே நான் கெடுத்த ஒரே பெண் நீ தான் !’ என்று கங்காவை நோக்கி விம்முகிறானே ‘கெட்டுப்போன குழந்தை, (Spoiled Child) பிரபு. அங்கே தான், உயர்ந்த பிள்ளையாண்டான், நிஜமாகவே உயர்ந்து நிற்கிறான் !

இந்த ஒரு புண்ணியத்தை - ஒரேயொரு புண்ணியத்தைக் கட்டிக் கொண்டதன் விளைவாக, பிரபுவின் மூலம் தான் ஜெயகாந்தன் என்னும் சில நேரங்களில் சில மனிதர்கள் படைப்பாளியும் உயர்கிறார் ; உயர்த்தப்படுகிறார் என்பதும் சரியே !