பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை. எஸ். ஆறுமுகம் Δ 37



எல்லாத்தையும் உளறாமல் இருந்திருந்தால் ?...” நனவோடையில் நெஞ்சின் அலைகள் ஆர்ப்பரிக்கின்றன.

இப்போது இந்தக் கங்கா ரொம்பவும் கெட்டி ஆகி விட்டிருக்கவேண்டும்; அதனால்தானோ என்னவோ, அவள் தன்னை அசடு என்று ஒப்புக் கொள்வதில்லை. இப்போதெல்லாம் ஜாக்கிரதையாக, வெகு ஜாக்கிரதையாகவே இருக்கிறாள்!-போதாக்குறைக்கு, அனுபவிக்க வேண்டாததையெல்லாம் பருவம் தவறி, நிலை தவறி, காலம் தவறி, இடம் தவறி, நேரம் தவறி அனுபவித்த—அனுபவிக்க நேர்ந்ததற்குப் பன்னிரண்டு ஆண்டுகள் கழித்துச் ‘சத்திய சோதனைத் தெய்வம்’ காந்தி அடிகளின் பொன்மொழிகள் காலங்கடந்த காலத்தில், நேரம் கெட்ட நேரத்தில் அவள் கண்களில் பட்டுத் தொலைத்தனவே அவளை இனிமேல் யாருமே புதிதாகக் கெடுத்து விட முடியாது! அவள் ரொம்ப உஷார்!- யாரையும் சுலபமா நம்பிடாதே!’ என அவளுக்கு அவளது மனமே காப்புக் கட்டிய பின், இனி அவளுக்குக் கவலை ஏதாம் ?

சரி;

மகாத்மா அப்படி என்னதான் சொல்லி வைத்தாராம்? “

...நான் பெண்களுக்குச் சொல்வது இதுதான்: உன்னை ஒருவன் பலாத்காரமாகக் கற்பழிக்க முயலும் போது, உனக்கு நான் அஹிம்சையை உபதேசிக்க மாட்டேன். நீ எந்த ஆயுதத்தையும் உபயோகிக்கலாம். நீ நிராயுதபாணியாக இருந்தால், இயற்கை உனக்குத் தந்த பல்லும் நகமும் எங்கே போயிற்று?-இந்த நிலைமையில், நீ செய்கிற கொலையோ, அது முடியாதபோது, நீ செய்துகொள்கிற தற்கொலையோ பாவமாகாது!...”

என்னுடைய கற்பனை தர்க்கம் செய்யவோ,இன்றேல் குதர்க்கம் பேசவோ, உச்சநிலைக்கு எதிர்நிலையில் (anti-climax) ஒடுகிறது; ஒட்டம் பிடிக்கிறது. அன்றைக்கு, அதாவது, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், அந்தச் சம்பவம் அன்று மாலையில் நிகழ்வதற்கு முன்னர்ஜெ-3