பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 Δ ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை



அவள் பார்வையில் அஹிம்ஸா மூர்த்தியின் மேற்கண்ட மூதுரை தென்பட்டிருந்தால், அப்போது, அதாவது பிரபு கெட் இன்’ என்று கொட்டும் மழையில் கொட்டாத தேளாகவோ, பிள்ளைப் பூச்சியாகவோ, என்னவோ ஒன்றாக, அவளைக் கையைப் பிடித்து இழுக்காத குறையாக அவசரப்படுத்தியதால், அவள் அந்தப் பெரிய வண்டியில் ஈரத் தாவணி சல்லாபமாகக் கண் சிமிட்டிய நிலையில் அந்தப் பெரிய வண்டியில் ஏறிக்கொள்ள அப்புறம்...அவன் அவளை இன்பம் துய்க்க முயற்சி செய்த காலையில் (நேரம்=மாலை-- இருள்), அவள்-அதாகப்பட்டது. இந்தக் கங்கா, அவனை-அதாகப்பட்டது, இந்தப் பிரபுவைக் கடித்துக் குதறிக் காறி உமிழ்ந்து, தனது பொன்னான கற்பைக் காத்துக் கொண்டிருப்பாளா, என்ன?

யோசிக்கும் வேளையில்:

விடை: ஊஹூம்!...

குற்றவாளியான கங்கா, அவ்வாறு குற்றவாளி ஆனதற்கு அவளே முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்யவள்! அவளது தவற்றுக்கு அவள் மனம்தான் சாட்சி! -ஆமாம், மனத்திற்கு மனம்தான் சாட்சி! மற்றப்படி தமிழ்த் திரையில் பேசப்படுகிறதே அதேமாதிரி சமுதாயம் அது இது எதுவுமே அவளது கற்பு பறிபோனதற்குப் பொறுப்பேற்க முடியாது!-பார்க்கப் போனால் பிரபு மீது பழிபோடுவதுகூட சட்டத்தின் விதிக்குப் பொருந்தக் கூடும்; ஆனால் விதியின் சட்டத்திற்கு பொருத்தமாக இருக்க இயலாது. இவ்வாறு சூழ்நிலையையும் காரண காரியங்களையும் நுணுகி ஆராய்ந்தால் அந்தக் கற்பழிப்புப் படலம் நடந்தேறியதற்கு முதற்காரணமாகக் கங்காவேதான் அமைந்திருக்கிறாள்; இரண்டாவது காரணமாகவேதான் இரண்டாம் குற்றவாளி பிரபு அமைந்தான்! -

பிரபு என்னவோ கூறவேண்டுமாம்: கேட்கலாம்.