பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை. எஸ். ஆறுமுகம் Δ 39



“...உனக்குத் தெரியுமோ? நான் ஒண்ணும் பெரிசா யோக்கியன், இல்லே;கண்ட கண்ட பொம்பளைங்களோட எல்லாம் போறவன்தான். ஆனா, ஒண்ணு; ஒருத்தியோட இஷ்டம் இல்லாம நான் இதுவரைக்கும் யாரையும் தொட்டது கூட இல்லே; அப்படி ஒரு தப்பு உன் விஷயத்திலேதான் செஞ்சுட்டேன்; அதுவும் நீ சம்மதிக்கிறேன்னு தப்பா நம்பினதினாலேதான், என்னாலே உன்கிட்டே அப்படி நடக்க முடிஞ்சுது, நீ யோசிச்சுப்பாரு அன்னைக்குக்கூட, நான் உன்னை கம்பெல்’ (பலாத்காரம்) பண்ணினேனா?”

ஆக ஓர் உண்மை, ஒர் அந்தரங்கம் புலனாகிறது. உண்மைதான். கொட்டிய மழையில் கெட் இன் என்று துரிதப்படுத்திய பிரபுவை எடுத்த எடுப்பில், பார்த்த மாத்திரத்திலேயே “அம்மன் சிலை தன்னை அவன்பால் இழந்து விட்டிருக்கவேண்டும்; இப்படிப்பட்ட இழப்பிலே தான், அவளுடைய கற்பை அவன் பறித்திருக்கிறான்; அவளும் தன் கற்பை அவனிடம் பறிகொடுதிருக்கிறாள், இங்கேதான். கங்கா அடிபட்டுப் போய்விடுகிறாள்!நடப்பும் அதுதானே? அவளது இந்தப் பேரிழப்புக்கு நீங்களோ, நானோ இல்லை, மிஸ்டர் பிரபுவோ, அல்லது, தமது அன்புச் சமுதாயமோ பதில் சொல்லத் தேவை இல்லை!-அவளும், அதாவது கங்காவும்: கங்காவின் ஜெயகாந்தனும்தான் பதில் சொல்ல வேண்டும், அவர்கள் பதில் சொன்னார்களா?...

பதில்: இல்லை!”

ஆனால்

குற்றத் தொடர்பான சட்ட வல்லுனரான வெங்கு மாமா ஆமாம், கங்காவின் பிரச்சினைக்குரிய அன்புமாமா ஒரு சமயம் கங்காவிடம் கொஞ்சம் பச்சையாகவும் கொஞ்சம் சிகப்பாகவும் அவள் மனத்தை எக்ஸ்ரே படம், எடுத்து, அவள் வசமே அதைச் சமர்ப்பிக்கவும் செய்தார்;... இந்த