பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40 Δ ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை



புஸ்தகத்தை (ஆசிரியர் : காந்தி மகாத்மா) நீ காலங் கடந்து படிச்சிருக்கே இப்பவாவது படிச்சயே, ஒரு விதத்திலே சரிதான் !-உன்னைப் பலாத்காரம் செய்ய வரவாகிட்டே. அது பொருந்தும். ஆனால், அவன் (பிரபு! உன்னைப் பலாத்காரமா செஞ்சான் ? உன்னை மாதிரிப் பெண்களை எவனும் பலாத்காரம் செய்ய வேண்டாம் !” பால் உணர்வில் கவர்ச்சியும் இனக்கவர்ச்சியில் சபலமும் ஒட்டுதலும் கைவரப்பெற்ற கிரிமினல் லாயர் ஆன இந்தக் கிழப் பிராமணர் பெரிய உடலியல் மனநிபுணர் மாதிரி, எத்தனை பெரிய உண்மையை எத்தனை லகுவாக கோடி காண்பித்துவிட்டார் ?

கங்காவின் கீழ்த்தரமான இம்மன இயல்பை வெறும் அசட்டுத்தனமென்று ஜே. கே. மாதிரி நாமும் நம்பிவிட முடியவில்லை. இத்தகைய மனநிலையிலேதான், கங்காவின் மனப்பலவீனமே பிள்ளையார் சுழிபோடத் தலைப்பட்டது என்பதையும் நாவலாசிரியர் மறந்துவிடவில்லை !

நிரூபணமாக, மிஸ் கங்காவே மறுபடி பேச வாயெடுக்கிறாள் ; “அவர் (மாமா வெங்கு என்கிற வெங்கட் ராமய்யர்வாள்) சொன்னது உண்மைதான் ; ஆனா, அவர் சொன்னதை அவரே நம்பலே. அதனாலேதான் இந்த நிமிஷம் வரைக்கும் அவர் என்னைப் பலாத்காரம் செய்யாமல் இருக்கார். அப்படி அவர் செஞ்சா, மகாத்மா காந்தி சொன்னமாதிரி, நான் கொலையும் செய்ய மாட்டேன் : தற்கொலையும் செஞ்சுக்கமாட்டேன். ஏதோ ஒரு நேரத்திலே, ஏதோ ஒரு பயத்திலே, ஏதோ ஒரு யோசனையிலே. அந்த வார்த்தைகளுக்கு அடியிலே பொய்யாய் நான் கிழிச்ச சிகப்புக்கோடுகள்தான் இவ்வளவு காலமாக என்னைக் காப்பாத்திண்டு இருக்கு !’ -

இங்கேயும் மதயானைக்குச் சறுக்கி விட்டது. எதற்கும் துணிந்த கட்டைக்குப் பட்ட காலிலே பட்டாலும், படாத காலிலே பட்டாலும் குடியா முழுகிவிடப்