பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை. எஸ். ஆறுமுகம் Δ 41



போகிறது ? எ ன் கி ற வயிற்றெரிச்சலில்தானோ என்னவோ, கங்காவின் அடிப்படையான பலவீனத்தையே அடித்தள ஆதாரமாக்கி அவளையே தீராத விளையாட்டுப் பெண்ணாகவும் தீராத பிரச்னையாகவும் ஆக்கி, தன் மனம் போன போக்கில் சந்திக்கு இழுத்திருக்கிறார், சந்திசிரிக்கவும் வைத்திருக்கிறார் பிரச்னை எழுத்தாளர். கங்காவைப் பொறுத்தவரை. ‘முதற்காளாஞ்சி’ மரியாதைக்கு உரியவர் கங்காவின் ஜே. கே. தானே ?—பின், அவர், அவளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிறீர்களா ?

நான் ஊம் கொட்டமாட்டேன்.

ஜே. கே+கங்கா !

மண்ணுலக வாழ்க்கையில் மானுடப் பெண்ணாக திரு அவதாரம் எடுத்துச் சராசரியான மனித ஜன்மத்தின் சராசரியான பலம் மற்றும் பலவீனங்களோடு சமுதாய வீதிகளிலே உலாவந்த கங்காவின் அவலத்துக்கும் அலங்கோலத்துக்கும் காரணமாக, அவளது முரண்பாட்டுப் புத்தியை ஆதியோடத்தமாகவும், சாங்கோபாங்கமாகவும் சித்திரித்துக் காட்ட முன் வந்த கதை ஒர் வாழ்க்கை என்னும் மரத்தின் முரண்பாடு என்கிற நுனிக் கொம்பில் நின்று கொண்டு கங்கா புடைசூழத்தான், தமிழ்ப் பண்பாடு மற்றும் தமிழ் மரபு என்னும் படியான அடிக் கொம்பை வெட்டத் துணிந்திருக்கிறான் என்பதையும் ‘சி. நே. சி. ம. நவீனம், நவீனப் பாணியில் அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ச்சி நடத்தியிருக்கிறதென்பதையும் மறுப்பதறகில்லை தான் !-ஆகவே தான், ஜே. கே, கங்காவின் சார்பில் வக்காலத்து’ வாங்கவும் தயாராகிறார் ; தயாராக வேண்டியவர் ஆகிறார். இருப்பதை அப்படியே காட்டுவதில் அசகாயகுரரென்று பேரெடுத்துள்ளதாக விமர்சிக்கப்படும் கங்காவின் ஆசிரியர், குறுப்பிட்ட ஒரு சூழ்நிலையில் மிகுந்த தனித்துவத்துடன்