பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை. எஸ். ஆறுமுகம் Δ 47




எழுதிக் குவிக்கலாயினர் ! இப்போதெல்லாம் இந்த நாலு பேரைப் பற்றி மட்டுமே தான் பேசப்படுகிறது இலக்கிய வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட விபத்துக்கள் தவிர்க்கப் படுவதில்லைதான் ! ஆனாலும், இந்த நாலுபேரையும் உண்மையான இலக்கிய ஆர்வலர்கள் இப்போது உண்மையாகவே இனம் காணத் தொடங்கி விட்டனர். இவ்வகையில், தமிழ் மக்களைப் பாதை மாற்றித் திசை திரும்பி விட முயன்ற, முயலும் மேற்கண்ட போலி எழுத்தாளர்களையும் எழுத்தாளிகளையும் ‘சுதந்திரம்’ வாயிலாக ‘இனம் காட்டி’ அவர்களது சுய ரூபங்களையும் காட்டிய ஒர் ஆறுதலும் எனக்குக் கிடைத்தது ; கிடைக் கிறது ! ... சரி !

திரும்பிப் பார்க்கிறேன்:...

கங்காவை மறுபடி திரும்பிப் பார்க்கிறேன் !

அவள் சில நேரங்களில் சில மனிதர்கள் ஜெயகாந்தனின் அன்புக் கங்கா - அருமைக் கங்கா !

ஏன், அவள், அவளுடைய பிரபு வருணித்த மாதிரி, தேவதை கங்காவும் கூடத்தானே ?

என்னென்னவோ நடந்து விட்டது.

எப்படி எப்படியெல்லாமோ நடந்து விட்டது.

இறுதியான கட்டம் :

கங்கா உணர்ச்சி வயப்பட்ட நிலையில், அறிவு பூர்வமான நினைவில், அந்தரங்கம் புனிதமானது, என்னும் தத்துவத்தை நெஞ்சில் இருத்தி, தனக்குத் தானாகவும், தன்னில் தானாகவும் மனத்தை முகமூடி கிழித்தும் மனத்திற்கு மனமே சாட்சியாகவும் பேசிக் கொண்டிருக்கிறாள்: ..."என் மனசுக்கு நன்னா தெரியறது. நான் எந்த மனுஷனை மனப்பூர்வமா சம்மதிச்சு ஏத்துண்டாலும், அந்த உறவுக்கு எவ்வளவு மங்களகரமான பேரைச் சூட்டினாலும, அதுக்கப்புறம் எந்தக் கேவலமான