பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பதிப்புரை :

இலக்கியம், சமயம் போன்ற நூல்களின் ஆய்வினை, முன்னரே கழகம் வெளிட்டுள்ளது. தற்போது, நாவல்களின் ஆய்வினை வெளியிடும் வகையில், 'ஜெயகாந்தன்’ முதல் 'சிவசங்கரி' வரை : வெளி வருகின்றது.

இந்நூலாசிரியர் பூவை எஸ். ஆறுமுகம் அவர்கள், திருச்சி அர்ச் சூசையப்பர் கல்லூரியில் பி.ஏ. படித்து முடித்ததும், பொன்னி'யில் இலக்கியப் பணியினை ஆரம்பித்தார். பின்னர் ‘உமா'வின் பொறுப்பாசிரியராகப் பொறுப்பேற்று, இதன் வழி, இலக்கிய ஆய்வுகள் பல செய்தார். இவ்வாய்வில் வெற்றியும் பெற்றுத் தனி முத்திரையும் பதித்துள்ளார். இதன் நற்பலன்தான், இந்த இலக்கியத் திறனாய்வு வரிசை. இவ் வரிசையில், முதலில் 'கல்கி முதல் அகிலன் வரை' எனும் நூல் வெளிவந்தது. அதனையடுத்து 'ஜெயகாந்தன்' முதல் ‘சிவசங்கரி' வரை: எனும் இந்நூல் வெளிவருகின்றது.

இவ்வாய்வில், பத்துப் பேருடைய நாவல்களின் ஆய்வு அடங்கியுள்ளது. ஒவ்வோர் ஆய்வும் படித்துப் பாதுகாக்க வேண்டிய முறையில் அமைந்துள்ளது.

இவ்வாசிரியர், தமிழக அரசின் முதற் பரிசினை மூன்று முறை பெற்றுள்ளார். அந்த வகையில் இவ்வாய்வு நூலும் பலரின் பாராட்டுதலையும் பெறும் என நம்புகிறோம்.

ப்போது, நம் பூவை பேசுகின்றார் : உங்கள் அன்புப் பூவையின் 72வது பிறந்த நாள் விரைவிலேயே விழக்கோலம் பூணவிருக்கின்ற நல்ல நேரத்திலே, இந்நூல் வெளியிடுவதில் நாங்கள் மெத்தவும் மகிழ்கிறோம் !...

கழகம் வெளியிடுகின்ற நூலினை வாசக அன்பர்கள் வரவேற்பதுபோல், இந்நூலினையும் வரவேற்பார்கள் என்ப்து உறுதியே.

—சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

🌑🌑🌑