பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48 Δ ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை



விபச்சாரத்துச்கும் நான் தயாராயிடுவேன். ஏன் அப்படி நான் நினைக்கிறேன் ? ஏன்னா, எனனைப் பொறுத்த வரைக்கும் இது அதனுடைய ஆரம்பம்னு உள்ளுர(ற)த் தோன்றது ; பயமா இருக்கு ! இல்லேன்னா, என் மனசுக்கு எல்லா விதத்திலும் பிடிச்சு இருக்கிற இவர் கிட்டேயே (பிரபு-மிஸ்டர் பிரபு) நான் இப்படி விலகி இருக்க மாட்டேன். இவரை விட எனக்கு பிடிச்ச இன்னொரு புருஷாள் இருக்கவே முடியாது. நான் தைரியமா, என் மனசுக்குள்ளே முதல் தடவையா, இறுதியா நினைக்கறேன் : எஸ் ! ஐ லவ் ஹிம் !... ஆனால், இந்த லவ் எல்லா லவ் மாதிரியும் எதிலேயோ போய் முடியாது !? இது முடியற, தீர்ந்து போற, திகட்டிப் போற காதை இல்லை !... இவரைப் பிரியவோ, இவரை இழக்கவோ நான் எந்தச் சூழ்நிலையிலும் சம்மதிக்க மாட்டேன். இவர் கேட்டார்னா, இவருக்காக நான் எதையும் தருவேன்—இந்த உடம்பு உட்பட ! ஆனால், இவரே விரும்பினால் கூட அதுக்கு இவர் என்னென்னவோ காரணம் சொல்கிறார் ; இவரை விட்டுப் பிரிஞ்சு இருக்க நான் ஒருக்காலும் சம்மதிக்க மாட்டேன் !... இவருக்கும் கூட இது புரியலையேன்னு நினைச்சு நான் சிரிக்கறேன்...!” அவளது மனச்சாட்சி சிரித்ததா, இல்லை, அவளேதான் சிரித்தாளா ?

தன்னை மறந்து, தான் சம்பந்தம் கொண்ட இந்தத் தமிழச் சாதிச் சமுதாயத்தையும் மறந்து, சமுதாய விதியையும் மறந்து, சமுதாயத்தின் வீதியிலே, ஒடின காரிலே ஓடாமல் கொள்ளாமல் வழுக்கி விழுந்த கங்கா உயிர் மூச்சை உயிர்ப்பு வழுவாமல் இழுத்துப் பிடித்துக் கொண்டு, மெள்ள மெள்ள, மெல்ல மெல்ல எழ முயன்று’ எழுந்து நின்று, குனிந்திருந்த தலையைக் கம்பீரமாக நிமிர்த்த எத்தனம் செய்து நிமிர்த்திக்கொண்டு, சூது கல்வி விடுதலை பெற்ற தார்மீக உணர்வோடு, தன்னைத் தானே திரும்பிப் பார்த்துக்கொண்டு, தனக்குத் தானே தன் மனத்தையும் மனநேசத்தையும் அங்கீகரிக்கப்படாத