பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

35


கொண்டிருந்தது. சுற்றும் முற்றும் பார்தேன். குரங்காட்டி ஹார்மோனியத்தைத் திறந்து ஸ்வரம் போட்டுக் கொண்டிருந்தான். எருமைக் கன்று சத்தமிடவது போல இருந்தது. பக்கத்தில் வாழைப்பங்கள் எல்லாம் உரிக்கப்பட்டு தோல்கள் கிடந்தன. கடவுளே! இவ்வளவும் கனவுதானா? சட்டென்று எழுந்து உட்கார்ந்தேன். என் மார்பிலிருந்து கீழே விழுந்த குரங்கு என்னை நோக்கி ‘கிக் கிக் கிக்“ என்றது. “ஐயா! அனுமாருக்கு காலனா கொடுப்பாரு நான் வாத்தியம் வாசிப்பேன்” என்றான் குரங்காட்டி.

“இங்கு எத்தனை நேரமாய் நின்று கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டேன்.

“கால் நாழியாக நிற்கிறேன் சாமி! இன்று முழிச்ச முகமில்லை. பொழுது விடிந்து தம்பிடி கூடக் கிடைக்கவில்லை. அதோ அந்தப் பித்துக்குளி வீட்டில் ஒரு நாழி வீணாய் போய்ச்சு. நீங்களா பட்டப்பகலில் தூங்கிப் போயிட்டீங்க” என்றான்.

பித்துக்குளி என்றதும் நான் பக்கத்தில் திரும்பிப் பார்த்தேன். குரங்கு அப்போது தான் “ஜீவரசம்” இருந்த புட்டியைத் திறந்து கொண்டிருந்தது. “ஐயையோ” என்று ஒரு சத்தம் போட்டு அதைப் பிடுங்கி வீசியெறிந்தேன். கிராமவாசம் போதும் போதுமென்று ஆகி ஸ்டேஷனை நோக்கி வேகமாய் நடக்க ஆரம்பித்தேன். அப்போது குரங்கு என்னை உற்றுப்பார்த்து ‘வக் வக் வக்' என்றது.

“மாட்டேன்” என்று சொல்லிக்கொண்டே அதற்கு நான் ஸலாம் போட்டேன்.