பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

புடைப்பிற் கற்றும் பூந்தலைச் சிறுகோல் உண்ணென் றேக்குடி புடைப்பத் தெண்ணீர்

முத்தரிப் பொற் சிலம்பொலிப்ப... பந்தரோடி
-நற்110

என்னே இவ்விரு காட்சிகளின் இருவேறு தன்மைகள்! முன்னையது குழந்தையின் பசியைப் போக்கும் முயற்சி. பின்னையது குழந்தையின் பசியையுண்டாக்கும் முயற்சி. ஆயினும், வாழ்விலும் தாழ்விலும், தமிழகத் தாய்மார். தம்மக்கள் சான்றோர் எனக் கேட்டபோதுதான் ஈன்ற பொழுதினும் பெரிதும் மகிழ்ந்தனர்; தாய்மையின் தகைமைக்கும் முரணாகப் பிறப்பொத்த தம்மக்களுள் அறிவுடையோரையே மிகவும் போற்றினரென்பதை.

"பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயுமனந் திரியும்” -புறம்.183

என்ற புறநானூற்றடிகள் விளக்கும். அதுமட்டுமா? இதற்கு முற்றிலும் மாறாகத் தன் மகன் சான்றோர் பழிக்கும் தீயோன் என்றால் அதைக் கேட்டு வாழ்வதை விட-அவனைப் பெற்ற வயிறு பற்றியெறிய அவ்வயிற்றுடன் வாழ்வதைக் காட்டிலும் - அவ்வயிற்றையே கிழித்துப் பழிவாங்கிப் பின்னர் இறப்பேன் என முழங்கினள் ஒரு தாய் என்றால் தமிழகத் தாய்மாரின் தாய்மைக் கடமையுணர்ச்சிதான் என்னே!

"வாதுவல் வயிறே வாதுவல் வயிறே
தோலா அதனகத்து உன்னின்ற னனே!

***


எம்மில் செய்யா அரும்பழி செய்த

கல்லாக் காளை நின்னின்ற னளே!"
-தகடூர் யாத்திரை