பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

“உள்ளறிந்ததன்றிமற்றிவ் வூரறிந்ததில்லையே' என்றபடி யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பமுறுவதோர் பொருளாதலானும், முத்திப் பயனாய பேரின்பத்தையும் தன்னகத்தே குறிப்பாய்க் கொண்டுள்ளதாகலானும் தொல்லாணைத் துறையோகிய நல்லாசிரியர் இதனை அகம் என்றனர். அன்றியும் இஃது,

"சொற்பால் அமிழ்திவள் யான்கவை
      யென்னத் துணிந்திங்கனே
நற்பால் வினைத்தெய்வம் தந்தின்று
      நாணிவளாம் பகுதிப் பொற்பாரறிவார்.

என்ற கோவையார்ப்பகுதியானும் இதற்கு 'நல்வினைத் தெய்வம் களவின்கட் கூட்ட, அமுதமும் அதன்கட் சுரந்து நின்ற சுவையுமென்ன, என்னெஞ்சம் இவள்கண்ணே கரந்து ஒடுங்க, யானென்பதோர் தன்மை காணாதொழிய, இருவருள்ளமும் ஒருவேமா மாறுகரப்ப, ஒருவேமாகிய ஏகாந்தத்தின்கட்பிறந்த புணர்ச்சிப் பேரின்ப வெள்ளம் (இதனை அனுபவிக்கின்ற யானே அறியினல்லது) யாவரான் அறியப்படுமென்று மகிழ்ந் துரைத்தான்” எனப் பேராசிரியர் உரைத்த உரைப் பகுதியானும் உணரப்படும். இவ்வகை ஒழுக்கம் ஒழிந்த ஏனைய வாழ்க்கையின் முடிந்த பேறாகிய வீடு பேறும், அதற்குக் கருவியாய அறஞ்செயலும், அதற்கான பொருளும் அவற்றிற் கிடையூறு நேருங்கால் ஆற்றும் போரும் பிறவுமெல்லாம் புறம் எனப்படுகின்றது.

அகத்தினைத் தொல்காப்பியம் களவு கற்பு எனப் பகுத்துரைக்கின்றது, அவற்றுள் களவு, "இன்பமும் அறனும்