பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

என்னும் 86-ஆம் நெடுந்தொகைப் பாடலில், திருமண முறைக் குறிப்புக்கள் சில உள. உழுந்து முதலியன இட்டுப் படைத்த உணவுத்திரள் நிறைந்திருக்க, நல்ல காவணம் அமைத்து, புதுமணல் பரப்பியிருக்கத் திருவிளக்கு ஏற்றிவைக்கப்பட்டுப் பூமாலைகள் பொலிவுறத் தொங்கவிடப்பட்டுள்ளன. தீக்கோள்கள் நீங்கி விளங்கும் நன்னாள். காரிருள் அகன்ற காலை நேரம். நன்னீர்க் குடங்களேந்திய முதிய பெண்டிர் கலகலவெனப் பேசிக்கொண்டு, அவற்றை முன்னும் பின்னுமாக முறையே கொண்டு வந்து தர, மகப்பேறெய்திய மங்கல மகளிர் நால்வர் அவற்றை வாங்கி, நெல்லும் மலரும் தூவி, மணமகளை நன்னீராட்டிப் பின்னர், கற்பினில் வழாது பொற்புடன் விளங்கி, பெற்றோர் விரும்பும் பெற்றியை யாகென வாழ்த்துகின்றனர். பின்னர்ப் பெற்றோர், "நீ பேரிற்கிழத்தியாகுக என வாழ்த்தி மணமகன்பால் கொடுக்கின்றனர். இம்முறையே குறிப்பாக இப்பாவிற் பயிலுகின்றது. அன்றியும்,

“மைப்புறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப்
புள்ளுப் புனர்ந்தினிய வாகத் தெள்ளொளி
அங்கண் இருவிசும்பு விளங்கத் திங்கட்
சகடம் புனைந்து, கடவுட் பேணிப்
படுமென முழவொரு பருஉப்பணை இமிழ
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்று

★ ★ ★


மழைப் பட்டன்ன மணல்மலி பந்தர்
இழையணி சிறப்பில் பெயர் வியர்ப்பாற்றி த

மக்கிந்த தலைநாள்"
- அகம். 136