பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

என்ற அகநானூற்று அடிகளாலும் இது ஒருவாறு வலியுறுகின்றது. இவற்றால் திருமணத்தின்போது மணமக்களை நன்னீராட்டி, நலம்பெற அணிவித்து மகிழ்வர் என்பதும், மணவினை மனை நன்றாக ஒப்பனை செய்யப்பட்டு நிற்கும் செய்தியும் தெளிவாகின்றன. மங்கல வாழ்த்தில், மணமனையில்,

“மாலைதாழ் சென்னி வயிரமணித் துணகத்து
நீல விதானத்து நித்திலப் பூம்பந்தர்"

விளங்குவதை, இளங்கோவும் எடுத்தியம்புவது காண்க.

மணமனையில் மல்கும் மங்கல நறுமணச் சூழலை,

“சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்
...............இடித்த கண்ணத்தர்.
விளங்கினர் கலத்தினர் விரிந்த பாலிகை
முளைக்குடநிரையினர்..........."

என்ற சிலப்பதிகார அடிகள் விளக்குகின்றன. 'மணவில் கமழும் மாமலைச்சாரல்’ என மலைபடுகடாமும் (151), மணமனை கமழும் கானம் என அகநானூறும் (107) உவகை முகத்தானும் எடுத்து ஒதுகின்றன. மண வினையிற் பங்கு கொள்ளும் பெண்டிரில் மங்கலப் பெண்டிரே சிறப்பாக வருவர் என்பதை முன்னர்க் கண்டோம். புறநானூற்றிலும், 'ஈகை அரிய இழை அணிமகளிர்' என வரும் பகுதியாலும் மணவினையில் மங்கலப் பெண்டிரே ஈடுபடற்குரியர் என்பது புலனாகின்றது. 'இழையணி' என்பதற்கு மங்கலப் பெண்டிற்குச் சிறந்த அணியாய "தாலி' என உரை வகுக்கின்றனர். ஈகை அரிய என்பதனைக் கொடுத்தற்கரிய எனக்கொண்டு, தாலியின் தனிப் பெருஞ் சிறப்பைக்