பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

இவ்விடைக்காலக் காவியங்களிற் காணலாம். திலகவதியாரின் பெற்றோர்களும், கலிப்பகையாரின் பெற்றோர்களும் இருவரையும் ஒன்று விக்கக் குலம் பேசிக் குணம் பேசிப் பாாக்கவில்லையா? இவ்வாறு களவியலருகித் திருமணமெல்லாம் கற்பிலேயே தொடங்கி மாறுபாடற்ற இடைக்காலத்தில், தமிழ்நாட்டுமணமுறைகளவியல் வழிக்கற்பியலாகும் என்பதே என்பதை வற்புறுத்தக் கம்பர் முதனூலின்றும் முரணி, இராமனும் சீதாபிராட்டியும் ஒருவரை ஒருவர் திருமணத்துக்கு முன்னரே கண்டு காதலுள்ளங்களாற் கலந்தனர்;

"உண்ணவும் நிலைபெறா துணர்வு மொன்றிட
அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்”

"பருகிய நோக்கெனும் பாசத்தாற் பிணித்து
ஒருவரை யொருவர்தம் முள்ள மீர்த்தலால்

வரிசிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்
இருவரும் மாறிப்புக் கிதயம் எய்தினர்”

என்றெல்லாம் புனைந்து கூறியிருப்பது தமிழ்நாட்டு மரபுக்கு ஏற்றதேயாகும். எனினும், திருமண முறை நிகழ்ச்சிகளில் புதிய சடங்குகளாகிய தாரை வார்த்தல், எரி ஓம்பல், எரிவலம் வரல், அம்மி மிதித்தல், அருந்ததி காட்டல் முதலியன கம்பரில் காணப்படுகின்றன. இடைக்காலத்து நிலவிய மணமுறை நிகழ்ச்சிகளைப் பெருங்கதை, மணநூலாகிய சீவக சிந்தாமணித் திருமணங்கள், கம்பராமாயணக் காட்சிகள் முதலியவற்றில் நுணுகியாராய்ந்துணரலாம்.