பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

நன்கறியப்பட்ட காலமே கி. மு. நான்காம் நூற்றாண்டுக்கு முன்னதாதல் வேண்டுமென்பது அசோகன் கற்றுண்களாலும் காரவேலனது ஹாதிகும்பக் கல்வெட்டாலும் அறிப்படுவதொன்று.

இன்று நமக்குக் கிடைத்திருப்பனவாய பழைய இலக்கண விலக்கியங்களால் இந் நிலையுடையராயிருந்தனர் தமிழர் என்பது தெளிவாகிறது.

இப்பழ நூல்களையாய்ந்தால் இதனினும் முன்னைய நிலையும் ஓரளவு அறியப்படுதலாம்.

அகத்திணை பற்றிய இலக்கணக் குறிப்புக்களால் ஐந்திணைப் பிரிவும் அவ்வத்திணைக்குரிய முதலுரிகருப் பொருள்களுமறிகிறோம். கருப் பொருளில் ஒரு பகுதியாக மக்களைக் கூறுங்கால், தலைமக்கள் நில மக்களென்ற பகுதியினரை யறிகிறோம். ஆயினும் அவ்வத்திணைக்குரிய அரசராவாரைப்பற்றி யேதுமறிந்திலோம்.

நாட்டு நடப்பு மாறிக் காலப்போக்கிலமையினும் அது நூலகத்திடம் பெறல் மிகத் தாழ்த்தேயாம்.

தமிழ்நாடு சிறுசிறு கூறாகப் பிரிந்து அவ்வக் கூற்றிலுள்ள பெரும்பான்மையான மக்களின் தலைவரே சாதித்தலைவராக அரசோச்சிய காலத்தையிலக்கணக் குறிப்புகளறிவிப்பன வாகலாம். முடியுங் குடையுமிலராய்ச் சாதித் தலைவர்களாய் மழவர் கோமான், களவர் கோமான் முதலியோர் நாட்டுத் தலைவராயாண்டமையைச் சங்க நூல்களாலும் அறிகிறோம்.

இவ்வாறு மழவர், களவர் முதலிய பல சாதி அல்லது குடியினர் தத்தங் குடிக்குத் தனியாட்சி கொண்டு விளங்கிய