பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

அதன்பின் தெலுங்கர், கன்னடர் முதலியோர் நாட்டிற் பல்கினர். புதிய பிரிவுகள் வளர்ந்தன. இன்றோ எண்ண முடியாத பல சாதிகளாகத் தமிழர் சமூகம் பிரிந்து கிடக்கிறது.

முகம்மதியர் கிறிஸ்தவர் முதலியோர் தொடர்பும் அதன்முன்பே ஜைன பெளத்த மத நுழைவும் பிற்காலத்தில் மேலைப் புலக் கருத்துக்களின் அறிவுமாகிய இவை பரவியிச் சாதிகளின் பிரிவுக் கொடுமையைத் தலைதட்டி வைத்துள்ளன.

தமிழ்நாடு காலப்போக்கில் விளைந்த அறிவியல் வளர்ச்சியாலும் வேறு பல மாறுதல்களாலும் நிலப்பரப்பு மொழிவகை யிவை தேய்ந்து ஒரில்லமெனத் தோற்றமளிக்கு மிக்காலம் தமிழரெல்லோரும் ஒரே சாதியினரென்று கொள்ளத் தக்க பெருநிலையினைச் சிறுகச்சிறுக வளர்த்தே தீருமென நம்பலாம்.

3

பாண்டிய நாட்டிலே சங்கங்கள் உயர்ந்தனவென ஒரு நம்பிக்கை தமிழரெல்லோரிடையும் பரவியுள்ளது. வேந்தரும் வேளிரும் கற்றுத் துறைபோய புலவர்களைச் சுற்றமெனப் பேணியமை பழநூல்கள் காட்டும். இசையுங்கூத்தும் வல்ல பாணர் பொருநரிவரும் பெருமதிப்புக் குரியராய் வாழ்ந்தமையும் அந்நூல்களாலறியலாம்.

இந்நாட்டு மக்களது கல்விநிலையைப் பற்றிக் கருதுவோம்.

சங்க வரலாறு, இலக்கண நூற்பாயிரங்களிலே கூறப்படும் ஆசிரியரிலக்கணம், மாணவரிலக்கணம் இவற்றை நோக்கின் தமிழர் சமூகம் கல்வியறிவு பெற்றுத் தழைத்ததொன்றே யென