பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

குத் தெரியாதிருக்கும் பல புதிய தகவல்கள் இலக்கியப் பேருரையில் இடம்பெற்றிருந்ததாகவும், இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் ஆக்க வழியில் ஆற்றியிருக்கும் தமிழ்ப் பணி ஆதாரபூர்வமாக உலகுக்கு எடுத்துக் கூறவேண்டு வது அவசியம் என்றும், இவ்வுரையை விரித்து நூலாக வெளியிடவேண்டும் என்றும் அன்புரிமையோடு வேண்டிக் கொண்டார். என்னைச் சந்திக்க நேர்ந்த இலக்கிய அன்பர்கள் பலரும் இதே வேண்டுகோளை விடுத்து வந்தனர். நானும் அதே வேகத்தில் இந்நூலை எழுதிமுடிக்க முனைந்தேன். வானொலி இலக்கிய பேருரை விரிவாகி நூலுருப் பெற்றது.

நூல் முழுமை பெற்றவுடன் டாக்டர் எப்.எம் உவைஸ் அவர்களின் பார்வைக்கு அனுப்பினேன். என் இலக்கியப் பயணத்தைப் பொறுத்தவரை எப்போதுமே பேரன்பும் பேராதரவும் காட்டி வரும் டாக்டர் உவைஸ் அவர்கள் அன்புடன் முன்னுரை வழங்கிச் சிறப்பித்தார்கள்.

அதேபோன்று எத்தனையோ பணிகளுக்கிடையே இந் நூலைப் படித்து, அதில் தோய்ந்து, அதன் மூலம் தான் பெற்ற உணர்வுகளை அணிந்துரையாக எழுதித் தந்தார் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி மேல்மட்டக் குழுத் தலைவராக இருந்த சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ. சிவ ஞானம் அவர்கள். அவர்கள் என் மீது கொண்டுள்ள அன்பும் நம்பிக்கையும் என்னையே வியக்கச் செய்வனவாகும்.

இத்தகைய இலக்கியப் பணிக்கு நேரடியாகவும் மறை முகமாகவும் ஆற்றுப்படுத்தி வந்த பன்னுாலாசிரியர் எம்.ஆர் எம். அப்துற்-றஹீம், டாக்டர் எம்.எம். உவைஸ் சீறாச் செல்வர் சிலம்பொலி டாக்டர் சு. செல்லப்பனார் ஆகியோர்களை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

எனது முதற்பதிப்பு நூலை ஆதரித்த தமிழ் மக்கள் இம்மறுபதிப்பையும் ஆதரிப்பார்கள் என நம்புகிறேன்.

அன்பன்
மணவை முஸ்தபா