பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

இஸ்லாமிய இலக்கியங்களை வரலாற்றுக் கண் கொண்டும் ஆய்ந்திருக்கிறார் இஸ்லாத்தின் வருகைக்கு முன்னும் பின்னும் தமிழில் தோன்றிய பிற சமய இலககியங்களையும் இஸ்லாமிய இலக்கியங்களோடு ஒப்பு நோக்கிக் காட்டுமிடத்து, அவரது உள்ளத்தின் நடுநிலைமை மகிழ்ச்சியைத் தருகிறது.

"பதினாறாம் நூற்றாண்டளவில் ஆதரிப்பாரற்ற தமிழ்ப் புலவர்களின் வாழ்க்கைப் போக்கும, சிந்தனையோட்டமும் தடம் புரண்டு தடுமாறும் நிலைக்கு ஆளாயிற்று. சிந்தனைத் திறத்தோடும் கற்பனை வளத்தோடும் சிறந்த கருத்துகளை உள்ளடக்கி 'இப்பாடலை இயற்றிருக்கிறேன். பரிசு கொடு’ என மிடுக்கோடும் பெருமிதத்தோடும் கேட்கும் நிலைபோய், எதைப் பாடினால் பரிசு கிடைக்குமோ அதைப் பாடிப் பரிசில் பெற்று வயிறு வளர்க்கும் நிலைக்குப் புலவருலகம் ஆட்பட்டு, தரம தாழ்ந்துவந்த இடரான கால கட்டத்தில் எழுத்தாணி ஏந்தி இலக்கியம் படைக்க முனைந்தார்கள் இஸ்லாமிய தமிழ்ப் புலவர்கள்." (பக். 18)

என்கிறார், திரு. மணவை முஸ்தபா.

அவர் வருணிப்பது போன்று பதினாறாம் நூற்றாண்டிலே புலவருலகம் பரிதாப நிலையில இருந்தது உண்மைதான். சங்ககாலப் புலவர்கள் பாதையிலேயும் அவர்கள் நடைபோடவிலலை; இடைக்கால, அகச்சமயப் புலவர்கள் வகுத்த தெய்வ நெறிப் பாதையிலேயும் நடை போடவில்லை. இநத இரண்டு வகையிலும் நடைபோட்ட புலவர்கள் ஒரு சிலர் உண்டென்றாலும், அவர்களை மட்டுமே கொண்டு தமிழர் மனநிறைவு அடைவதற்கில்லை. ஆனால் இந்த இழிநிலைக்கு தமிழ்ப்புலவருலகம் வந்ததற்கான காரணததை சமயக் கண்கொண்டு மொழி வரலாற்றை ஆராய்ந்து முடிவு காண முடியாது. இந்திய-தமிழக அரசியல் வரலாற்றை ஆராய்ந்துதான் முடிவு காணவேண்டும்