பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

“பிதாவினும் பிள்ளை மூர்க்கம் பெற்றுறு தந்தை தன்னைச் சதாளுறும் கோல தாகச் சதிசெயும் அது ஏதென"

அப்துல்லா இப்னு சலாம் வினவுகிறார். “தந்தையைவிட மகன் மூர்க்கமானவன்; தன் தந்தையை சாய்க்கும் வல்லமையுண்டு. அது எது?" என்று விடுகதை போன்று விடுக்கும் வினாவுக்கு விடையாகப் பெருமானார்.

'இரும்பு பிறக்கும் கல்லிடத்தில்
ஈடுபடுத்தும் இரும்புகல்லைப்
பொருந்த உருககை இரும்புபெறும்
பூண்ட இரும்பை உருக்கறுக்கும்
திருந்த நெருப்பை உருக்கீனும்
செய்ய உருக்கைத் தீவாட்டும்
வருந்தும் பிதாவின் பிள்ளைமிடுக்
காகும் மசலா இது என்றார்"

எனக் கூறுவதன் மூலம் 'கல்லிடத்தே பிறக்கும் இரும்பே கல்லை உடைக்கிறது; இரும்பே உருக்காகி இரும்பை அறுக்கிறது; வெட்டுகிறது. உருக்கு நெருப்பை ஈனுகிறது; அந்நெருப்பே உருக்கை வாட்டுகிறது. இதுவே, பிதாவின் பிள்ளை மிடுக்கு' எனக் கூறினார்.

கேள்வி ஒரு வரியினதாக இருந்தாலும் அதற்கான விடை ஒரு வரலாற்றின் மையமாக அமைவதும் உண்டு. சான்றாக, பெருமானாரை நோக்கி.

"கருதி ஒரு நாட்பொழுதைக் கண்ட நிலம் எது?"

என்ற கேள்விக்கு விடை கூறும் பெருமானார்.