பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

"காசாக்கம் செய்யும் பிருவூன் கலக்கத்தால்
மூசாப் பயகாம்பர் முன்னீர் இடை புகவே
ஆசாத் தடியால் அடித்தார் ஈராறுவழி
ஊசாப் பெருங்கடலின் உட்புகுந்து கொண்டதுமே”

எனக் கூறுகிறார். மூசா நபியவர்களின் வாழ்வின் மையமாகவும் திருப்புமுனைப் பகுதியாகவும் விளங்கிய சம்பவத்தை இப்பாடல் மூலம் விளக்குகிறார்.

எகிப்து நாட்டை ஆண்டுவந்த பிர்அவ்ன் எனும் கொடுங்கோல் மன்னன் தன்னையே இறைவனாக மக்கள் வணங்க வேணடும் எனப் பணித்திருந்தான மறுத்த இஸ்ரவேலர்களை மிகவும் கொடுமைப்படுத்தினான். பிர்அவ்ன் மன்னனின் பெருங் கொடுமைகளிலிருந்து, இஸ்ரவேலர் சளைக் காக்க எண்ணிய மூஸா நபியவர்கள் தன் இனத்தாரை அழைத்துக்கொணடு செங்கடலை நோக்கியும் சென்றார், செங்கடலில் இறங்கிய மூசா நபி ஆசா எனும் கைத்தடியால் செங்கடல் நீரை அடிக்க, அக்கடல் நீர் 12 வழிகளாகப் பிரிந்து பாதை காட்ட இஸ்ரவேல் மக்கள் அதன் வழியே நடந்துசென்று தப்பிக்க வழி வகுக்கிறது. கடல்நீரினுள் காலங் காலமாக அமிழ்ந்து கிடந்த அந்நிலம் அன்றுதான் நீரற்ற நிலமாகக் காட்சி தந்து, கதிரவனின் ஒளிக்கதிர்களைக் கண்டது. சூரிய ஒளி படர்ந்த அக்கடல் நிலப் பாதை வழியே இஸ்ரவேல் மக்கள் நடந்து சென்று மறுகரை அடைந்தனர். அவர்களை விரட்டி வந்த கொடுங்கோலன் பிர்அவ்னும் அவன் படையினரும் இஸ்ரவேலர் சென்ற அப்பாதை வழியே துரத்திச்செல்ல முயன்றபோது கடல்நீர் ஓடி அவர்களை அழித்தது. ஆகவே. கடலினடியில் கிடந்த நிலம் கதிரவன் ஒளிபெற்ற நாள் அன்று ஒரு நாள் மட்டுமே என்ற வரலாற்றுச் செய்தியைப் பதிலாகத் தந்து தெளிவுறுத்துகிறார் பெருமானார்.