பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

அடுத்து,

'விண்ணிலிருந்து விழுவதுமில்லை. மண்ணிலிருந்து ஓடுவதுமில்லை. ஆனால், விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே அந்தரத்தில் ஓர் ஆறு ஓடுகிறது. அது என்ன ஆறு' எனக் கேட்கப்படுகிறது.

"மண் தரைக்குள் ஏறாது வானிருந்து ஓடாது அங்கு
அந்தரத்தில் ஓராறுண்டது எமக்குக் கூறுமென
சுந்தரத்தோள் இபுனு சலாம் சுருதிவழியே கேட்க"

அதற்குப் பெருமானார், 'கடுமையாக உழைக்கும் உழைப்பாளி மக்களின் உடலில் ஓடும் வியர்வை நீரே விண்ணிற்கும் மண்ணிற்கும் இடையில் அந்தரத்தில் ஓடும் ஆறு’ எனக் கூறுவதன் மூலம் உழைக்கும் மக்களின் வியர்வையின் உன்னதத்தையே உணர்த்தி விடுகின்றார் பெருமானார் அவர்கள்.

ஆயிர மசலா ஆசிரியர் வண்ணப் பரிமளப் புலவர், இந்நூலில் சொர்க்கத்தின் மேன்மையையும் நரகத்தின் கொடுமையையும் மிக விரிவாகப் பேசுகிறார். இதனைப் படிப்போர் இறையச்சம் மிக்கோராய் நரக வேதனைக்குரிய தீய செயல்களைவிட்டு முற்றிலும் விலகி, இறைவன் கட்டளைக்கிணங்க, அவன் வகுத்தளித்த நன்னெறி வழி ஒழுகி, சொர்க்கம் சேர்ந்து சுவனப் பெருவாழ்வு பெற உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் வழிகாட்டுகிறார்.

இவ்வுலக வாழ்வில் இறைநெறி தவறி வாழ்வோர் எரிநரகில் பெறவிருக்கும் பெருந்துன்பத்தையும், அத்துன்பத்தை எத்தகையோர் பெறுவர் என்பதையும் பட்டியலிட்டுக்காட்டி நம்மை அச்சுறுத்துகிறார். நரகிற் சேர்வோர்: