பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

கொதுகொது கொதெனக் காய்ந்து குமுறிய
                           கனல் வெந்நீரைக்
கதகத கதவென வார்க்கக் கனங்குடல்
                            ஈரல் எல்லாம்
மொது மொது மொதெனத் தள்ளி
                            வீழ்ந்திடும் முறண்டுதானே"

எனக் கூறுகிறார். மது உண்டவர் வயிற்றுக்குள் சென்று, இறைவன் இயற்கையாக அளித்துள்ள உணர்வுகளை, மயக்கி, மறக்கச் செய்கிறது. இதனால், மதுவுண்டவர் தன் நிலை தடுமாறி தவறுகள் இழைக்கின்றனர்; எனவே, மறுமை நாளில், நரக வேதனையின்போது, இத் தீமைக்கு காரணமான இடமாக அமைந்துள்ள வயிற்றின் மீது கொதுகொது எனக் கனலாகக் காய்ந்த கொதி நீர் ஊற்றப்படும். இதனால் மது மயக்கம் கொண்ட குடல் மொது மொது எனத் தள்ளி வீழ்ந்துவிடும். இப்பாடல் இரட்டைக் கிளவியாக அமைந்து மது மயக்கத்தால் மனிதர் அடையும் நிலையையும் அதன் விளைவாகப் பெறுகின்ற தண்டனையின் தன்மைகளையும ஓசை நயத்தோடு மனத்தில் பதியும் வண்ணம் கூறிவிடுகின்றன

'ஆயிர மசலா' நூல் மிகச் சிறந்த நீதி இலக்கியமாகவும் இஸ்லாமிய வாழ்வியல் நெறியாகிய தீன் நெறி உணர்ததும் அறிவுப் பேழையாகவும் அமைந்துள்ளதெனலாம். நீதிக் கருத்துக்கள் இந்நூலெங்கும் விரவிக் கிடக்கின்றன. சான்றாக,

"மெய்யிலே பொய்யை நாட்டி
வெஞ்சினப் பிணியின் மூழ்கிப்
பொய்யிலே மெய்யை நாட்டப்
பொருந்துமோ புவனத்தோரே