பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

கொணர்ந்தார். இறுதியாக வெளிவந்த ஐந்தாம் பதிப்பு 'ஹதீது விசனம்- என்னும் சொற்றொடர் இணைய, "தவத்துது என்ற வெள்ளாட்டி மஸ்அலா ஹதீது விசனம்" எனும் பெயரில் உலா வந்துள்ளது

இந்நூல் 'ஆயிர மசலா' நூலினின்றும் வேறுபட்டதாக வசன நடையில் இயற்றப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப் போனால் தமிழில் அமைந்து மூன்று மசலா நூல்களில் உரைநடையில் அமைந்துள்ள மசலா நூல் இது ஒன்றேயாகும் இந்நூலுள் 669 வினாக்களுக்கு விடை பகரப்பட்டுளளது வெள்ளாட்டி எனும் தமிழ்ச் சொல்லுக்குப் 'பணிப்பெண்’ என்பது பொருளாகும்

இந்நூலில் கூறப்படும சமபவங்களுக்கான வரலாற்றுச் சான்றுகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்நூலின் தொடக்கத்தில் வெள்ளாட்டியாகிய தவத்துது பற்றிய வரலாற்றுச் செய்தி கூறப்படுகிறது. பகுதாது நாட்டிலுள்ள தாறுஸ்ஸலாம் எனும் நகரில் வாழ்ந்து வந்த செல்வந்தர் ஒருவருக்குக் குழந்தைப்பேறில்லாது இருந்தது. இறையருளால் நீண்ட காலத்திற்குப்பின் அச்செல்வந்தருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிள்ளைப் பேறில்லாது வருந்தி முதுமைப் பருவத்தில் பிள்ளைபெற்ற தந்தை அக்குழந்தைக்குப் 'பதுறுஸ்ஸமான்' எனப் பெயரிட்டு அறிவிலும் ஆற்றலிலும் ஒழுக்கத்திலும் மார்க்கசீலத்திலும மிகச் சிறந்தவனாக வளாக்க விரும்பினார். அதற்காக எல்லா குண நலன்களும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற பணிப்பெண் ஒருத்தியை தேடலானார். தான் விரும்பும் வெள்ளாட்டியாகிய பணிப்பெண் எப்படிப் பட்டவளாக இருக்க வேண்டும் என்பதை,

"எனக்கொரு வெள்ளாட்டியவள் சிறிய வயதானவள்
ஐந்து வயதுப் பெண்ணானவள், வர்ணிப்பிலடங்காத