பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

பெறத்தக்கதாக, இஸ்லாமிய ஞானச் செய்திக் களஞ்சியம் போன்று அமைந்துள்ளது ஆயிர மசலா, நூறு மசலா மசலா இரண்டும் செய்யுள் வடிவில் அமைந்திருக்க, வெள்ளாட்டி மசலா உரைநடை வடிவில் அமைந்திருப்பினும. இந்நூலுள் கூறப்படும் இஸ்லாமிய விஷயங்களைப் புரிந்து கொள்வது சாதாரணமானவர் கட்கு மிகவும் கஷ்டமாகும். திருமறையிலும் ஹதீதிலும் ஒரளவுக்கு நல்ல இஸ்லாமிய ஞானமுள்ளவர்களே வெள்ளாட்டி மசலாவைத தெளிவாகப் புரிந்து கொள்ள இயலும். சான்றாக,

கேள்வி: "தீனென்ப தென்ன" வென்று கேட்டார்.

பதில்: ::தீனாவது மஃரிபா வென்று நாயனையறிகிறதும் தவ்ஹீதென்னுமவனை ஒருமைப்படுத்தும் ஈமானென்றும், ஆறு கருமங்களைக் கொண்டு உறுதி கொள்வதும் இஸ்லாமென்றும் ஐந்து கருமங்களைக் கொண்டு வழிப்படுவதும் ஆக இந்நான்கும் பொதிந்ததுதான் தீனெனனு மார்க்கம்'.

இவ்விடையில் இடம்பெற்றுள்ள தீன், மஃரிபா, தவ்ஹீது, ஈமான் போன்ற சொற்களின் பொருள் விளக்கம் மட்டுமல்ல, அவை சுட்டும் விஷயங்களைப் பற்றிய போதிய மார்க்க ஞானமும் இருந்தாலொழிய இப்பதிலில் கூறியவற்றை யாரும் எளிதாகப் புரிந்து கொள்வது சற்றுக் கடினம்.

இந்நூலுள் கேட்கப்படும் பல கேள்விகள் சுவைமிக்கதாயும் அதேசமயம் கருத்துச் செறிவுள்ள வையாகவும் அமைந்து படிப்போரை மகிழ்ச்சிப்படுத்துகின்றன. சான் றாக, வணக்கமில்லா ஆலீமுக்கும். கொடையில்லாத ஒமானுக்கும், பொறுமையில்லாத பிச்சைக்காரர்ககும், நிதியில்லாத மன்னனுக்கும், பாவ மீட்சியில்லாத வாலிபனுக்கும், வெட்கமில்லாத மங்கைக்கும் உவமானம் என்னவென்று உலமா ஒருவர்விடுத்த வினாவிற்கு விடையாகத் தவத்தது வெள்ளாட்டி