பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழகம்

11



பெண்ணையாறு பிறந்த மாவட்டம் மைசூர். விளையாடிய மாவட்டங்கள் வட, தென் , ஆர்க்காடு மாவட்டங்கள். இறுதியிலே அது கடலகம் புகுகிறது. காவிரி வானமாமலையில் தோன்றி, மைசூரில் தவழ்ந்து, சேலம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் நடந்து, திருச்சியிலும் தஞ்சையிலும் களியாட்டம் ஆடி, இறுதியில் கடலிற் கலக்கிறது. வையை தென்னம் பொருப்பிலே தோன்றி, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களிலே பாய்கிறது. பேரியாறு தென்னம் பொருப்பிலே தோன்றி, திருவாங்கூர், கொச்சி வழியாகப் பாய்ந்து மேல் கடல் புகுகிறது. வானியாறும் வடக்கே தோன்றி மேல் கடலில் விழுகிறது.

பூவானியும் ஆன்பொருநையும் பொன்னியிலே கலக்கின்றன. வெள்ளாறும், தண்ணான்பொருநையும் கீழ் கடலில் விழுகின்றன. பொன்வானி, பொருநை என்பன மேலைக் கடலில் விழுகின்றன.

நில அமைப்பு

உலகில் உள்ள நிலங்கள் யாவும் ஒரே அமைப்பு உடையன அல்ல; அவ்வந் நிலத்தின் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்பவும், அமைப்பிற்கேற்பவும், அந்நில மக்களின் வாழ்க்கை , உணவு, உடை, பண்பாடு, பழக்கவழக்கங்கள் முதலியன மாறுபடுவது இயற்கை. எனவே அடுத்து நம் தமிழகத்தின் நில அமைப்பைப் பார்ப்போம்.

பண்டு தமிழ் நாட்டு நிலம் குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல், பாலை என ஐவகையாகப் பிரிக்கப்பட்டிருந்தது. மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி ஆகும். இந்நில மக்களது முக்கிய தொழில் வேட்டையாடுதலே. தினையும் பயிரிடுவர். தினை, வேட்டை மிருகங்கள், கானில் கிடைக்கும் காய், கனி, கிழங்கு முதலியவை இவர் தம் உணவுப்பொருள்