பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3. வரலாற்றிற்கு முற்பட்ட காலம்

பழைய கற்காலம்

நினைப்பிற்கெட்டா நெடுங்காலத்துக்கு முன்னர்க் கதிரவனிடமிருந்து ஒரு சிறு பகுதி தெறித்து விழுந்தது. விழுந்த பகுதி படிப்படியாகக் குளிர்ந்தது. பிறகு அதிலே நீரில் வாழ்வன தோன்றின. பின்னர் நீரிலும் நிலத்திலும் வாழவல்ல உயிர்கள் தோன்றின. இவ்வாறு பல்வேறு வகையான உயிர்கள் தோன்றித் தோன்றி இறுதியிலே மனிதன் தோன்றினான் என அறிஞர் பலர் நமது தோற்றம் குறித்துக் கூறியுள்ளனர்.

தோன்றிய மனிதன் முதலிலே விலங்குகள் போல வாழ்ந்தான். வாழ்க்கையிலே சிறிது சிறிதாக முன்னேறினான். விலங்குகள் போல வாழ்ந்த மனிதன் காலப்போக்கிலே மலைக்குகைகளில் வாழலானான். பின்னும் பல ஆண்டுகள் உருண்டோடின. மனிதன் கற்களைப் பயன்படுத்தத் தொடங்கினான். அக் கற்கள் மூலம் அவன் தனக்கு வேண்டிய உணவைப் பெறலானான்; தன்னைப் பிற உயிரினின்றும் காக்கத் தொடங்கினான். இவ்வாறு மனிதன் கற்களைக் கொண்டு தனக்கு வேண்டியன ஆக்கவும், தீங்கினின்றும் தன்னைக் காக்கவும், பிற உயிரைத் தாக்கவும் பயன்படுத்திய காலமே பழைய கற்காலமாகும். நாகரிகத்தின் முதற்படிதான் பழைய கற்காலம்.

பழைய கற்காலத்திலே மனிதன் கரடுமுரடான கற்களையே பயன்படுத்தினான். அவனுக்கு உணவாகப் பயன்பட்டவை காயுங் கிழங்கும் கனிகளுமே தாம். பழைய கற்கால மனிதனின் முந்தையர் யார்? அவர்தாம் கொரில்லா,