பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வரலாற்றிற்கு முற்பட்ட காலம்

17


உணர்ச்சி வடிவில் இறையைக் கண்டவன் கல்லிலே கடவுளைக் காணத் தலைப்பட்டான்.

இனி பழைய கற்கால மனிதன் பேசிய மொழியினைப் பற்றிப் பார்ப்போம். தொடக்கத்தில் மனிதன் தன் எண்ணங்களை வெளியிடாமல் தவித்தான்; துடித்தான். தனக்கு மேலே சிறகடித்துப் பறக்கும் பறவைகளைப் பார்த்தான். முதலிலே அவற்றைப் போலவே ஒலித்தான். பின்னர் சைகைகளைக் கொண்டு தன் கருத்தைத் தெரிவித்தான். இவ்வளவு நாகரிகம் அடைந்தும் இன்னும் நம் பேச்சில் பாதி அளவுக்கு மேல் சைகைகளே நிரம்பியுள்ளன. பின்னர் மனிதன் தான் பார்த்த உருவங்களை வரைந்து தன் கருத்தை உணர்த்தினான். இவ்வாறு படிப்படியாக முன்னேறி இறுதியிலே சொற்களைக் கண்டான்; கருத்தைத் தெரிவித்தான்.

பண்டை மக்கள்-பழைய கற்கால மக்கள் பதப்படுத்தாத கரடுமுரடான கற்களைப் பயன்படுத்தினர்; புலாலையும் காய் கிழங்குகளையும் உண்டனர்; தோலாடை இலையாடை உடுத்தினர்; இறந்தோரை வீசி எறிந்தனர்; அன்னை வணக்கம் கைக்கொண்டனர்; ஓரளவிற்கு ஓவிய உணர்வும் உடையவராக யிருந்தனர்.

புதிய கற்காலம்

நாகரிகப் படிகளிலே இரண்டாவது படி புதிய கற்காலமாகும். கரடுமுரடான கற்களைப் பயன்படுத்திய மனிதன் வழவழ என ஒளிபொழியும் தீட்டிய கல்லைப் பயன்படுத்திய - காலமே புதிய கற்காலமாகும். இக்காலத்தில் மனிதன் பல துறைகளிலும் முன்னேறலாயினான்; தன் வாழ்க்கை முறையைப் பல துறைகளிலும் மாற்றிக்கொண்டான்.

பழைய கற்கால மனிதன் நாடோடியாக அலைந்தான். ஆனால் காலப்போக்கில் ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை