பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 தமிழ் நூல் தொகுப்புக் கலை திணைப்பெயராற் பெயர் கூறினார். இத் திணைப் பெயர்பன்னிருபடலம் முதலிய நூல்களாற் கூறிய திணைப் பெயர் அன்று, தொல் காப்பியனார் கூறிய திணைப் பெயர்ப் பொருளே இப் பாட்டிற்குப் பொருளாகக் கோடலின், வஞ்சி மேற்செல்லலானும் காஞ்சி எஞ்சா தெதிர் சென்றுன்றலானும் வஞ்சியும் காஞ்சியும் தம்முள் மாறே எனப் பன்னிரு படலத்திற் கூறிய திணைப் பெயர் இப் பாட்டிற்குப் பொருளன்மை யுணர்க. அவர் முது மொழிக் காஞ்சி முதலியவற்றைப் பொதுவியல் என்று ஒரு படலமாக்கிக் கூறலின், அவை திணைப் பெயராகாமை உணர்க." மேற்காட்டிய தொல்காப்பிய உரைப் பகுதிகளைக் கொண்டும் மதுரைக் காஞ்சி உரைப்பகுதியைக் கொண்டும், பன்னிரு படலமும் தொல்காப்பியமும் மாறுபட்டன வாதலின், பன்னிரு படலத்தின் வெட்சிப் படலத்தைத் தொல்காப்பியர் இயற்றியிருக்க மாட்டார் என்பதே நச்சினார்க்கினியரின் கருத்து என்பதை நன்குணரலாம். இனி, இலக்கண விளக்க உரையாசிரியர் என்ன கூறுகிறார் என்று கேட்போம்: இலக் கண விளக்கம் - புறத்திணையியலிலுள்ள 'ஆன்ற காட்சியின் அகனன் குணர்ந்தோர் தோன்றக் கூறிய பறனெனப்படுவது அறம் பொருள் என்னும் இயல்பிற் றாகிப் புறம்பயில் ஒழுக்கம் என்மனார் புலவர்” என்னும் முதல் நூற்பாவின் கீழ், நூலாசிரியரே உரையாசிரி யராகவும் இருந்து எழுதியுள்ள. "...ஆன்ற காட்சியின் அகனன் குண்ர்ந்தோர் தோன்றக் கூறிய புறன் எனப்படுவது என்றார்,குறிஞ்சி முதலியவற்றிற்கு வெட்சி முதலிய புறனாங்கால் அவ் விலக்கணங்கள் ஒருபுடை ஒப்புமைபற்றிச் சார்புடைய வாதல் கூறல் வேண்டுதலின். 'ஆன்ற சிறப்பின் அறம் பொருள் இன்பமென மூன்று வகை நுதலியது உலகம் அவற்றுள் அறமும் இன்பமும் அகலா தாகிப் புறனெனப் படுவது பொருள் குறித்தன்றே.”