பக்கம்:தமிழ் அங்காடி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10 தமிழ் அங்காடி


அடி சறுக்கல்

இயற்பியல், வேதியியல், வானியல் போன்ற சில துறைகளில் அரிஸ்டாட்டில் வெளியிட்ட கருத்துகள் தவறானவை எனப் பிறகு அறியப்பட்டன.

வான், காற்று, நெருப்பு, நீர், மண் என்னும் ஐம்பெரும் பூதங்களுள், வான் என்னும் பூதம் வட்டமாகச் சுழன்று வானத்தை அமைத்தது. வட்டம் என்பது குறைவு ஒன்றும் இல்லாத முழுவடிவம்-என்பது அரிஸ்ட்டாட்டிலின் கருத்து.

இந்தக் கருத்து, கெப்லர் (Kepler) என்பவரின் கருத்தால் மறுக்கப்பட்டுள்ளது. கெப்லர் பின்வருமாறு கூறியுள்ளார்: எல்லாக் கோள்களும் ஞாயிற்றை ஒரு குவிமையத்தில் (Focus) கொண்டு (அதாவது ஞாயிற்றை மையமாகக் கொண்டு) சிறிது நீண்ட முட்டை வடிவமான (Elliptical) பாதைகளில் அதாவது நீள்வட்டப் பாதைகளில் இயங்கி ஞாயிற்றைச் சுற்றி வருகின்றன - எனக் கெப்லர் கூறியுள்ளார். இது 'கெப்லரின் விதி' (Kepler Theory) எனப்படும்.

கெப்லரின் விதி பிற்கால ஆய்வுகளுக்கும் ஒத்திருந்ததால், அரிஸ்ட்டாட்டிலின் கொள்கை சறுக்கலாயிற்று.

மற்றும் ஒன்று: பளுவான ஒரு பொருளையும் அதனினும் பளு குறைந்த ஒரு பொருளையும் குறிப்பிட்ட ஒரே உயரத்திலிருந்து ஒரே நேரத்தில் கீழே போட்டால், பளு உள்ள பொருள் முதலிலே தரையிலே விழும்; பளு குறைந்த பொருள் பிறகுதான் தரையிலே விழும் என்பது அரிஸ்ட்டாட்டிலின் கருத்து.

ஆனால் இதற்கு மாறாகப் பின்னால் நியூட்டன் கூறியுள்ளார்: பளு உள்ள ஒரு பொருளையும் பளு குறைந்த ஒரு பொருளையும் ஒரே உயரத்திலிருந்து ஒரே நேரத்தில் கீழே போட்டால் இரண்டும் ஒரே நேரத்தில் தரையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/12&oldid=1203004" இலிருந்து மீள்விக்கப்பட்டது