பக்கம்:தமிழ் அங்காடி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



12 தமிழ் அங்காடி


அவ்வாறு பாராட்டப் பெறுபவர் மிகவும் உயர்ந்தவராக இருக்க வேண்டும். அத்தகையவரிடத்தில் உள்ள சிறப்பைப் புரிந்துகொண்டு அவரைப் பாராட்ட முயல்பவரும் ஒரு வகையில் உயர்ந்தவரேயாவார்.

அவ்வாறு பாராட்டப் பெற்ற ஒருவர் 'சர் ஃஅம்பரி டேவி’ என்பவர். டேவி இங்கிலாந்துக்காரர்.

டேவியின் காலத்தில் பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே பெரும்போர் நிகழ்ந்து கொண்டிருந்தது. அப்போது பிரான்சு நாட்டின் பெருந்தலைவராயிருந்தவர் நெப்போலியன். 'நெப்போலியன் என்றால் அழுத பிள்ளையும் வாய் மூடிக் கொள்ளும்' என்று சொல்வதுண்டு. அந்த நெப்போலியன், சோடியம், பொட்டாசியம் ஆகிய தனிமங்களைக் கண்டுபிடித்த டேவிக்குப் பரிசு கொடுக்க எண்ணினார். அந்த அளவுக்கு டேவி அறிவியல் மாமேதையாகத் திகழ்ந்தார்.

பிறப்பு வளர்ப்பு

டேவி (Sir Humphry Davy) 1778-ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் இங்கிலாந்தில் உள்ள பென்சான்ஸ் என்னும் ஊரில் பிறந்தார்.

டேவி தாம் பிறந்த ஊரிலும் டிரூரோ என்னும் ஊரிலும் கல்வி கற்றார். ஒரு தச்சுத் தொழிலாளியின் மகனான டேவி பெரிய அளவில் படித்து விட்டார் என்று சொல்ல முடியாது. மருத்துவர் ஒருவரிடம் பணியாளராகச் சேர்ந்து பணி செய்து கொண்டிருந்த காலத்தில் தமக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தில் பல நூல்களை ஆர்வமுடன் படித்தார். வேதியியல் தொடர்பான நூல்களைப் படித்தது, பின்னால் வேதியியல் ஆய்வுக்குத் துணைபுரிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/14&oldid=1203013" இலிருந்து மீள்விக்கப்பட்டது