பக்கம்:தமிழ் அங்காடி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சுந்தர சண்முகனார் 13


ஆய்வுகள்

டேவி மின்சார வேதியியல் பகுப்பு முறையை அடிப்படையாகக் கொண்டு சோடியம், பொட்டாசியம், ஸ்ட்டிரான்சியம், குளோரின், கால்சியம் என்னும் தனிமங்களைக் கண்டுபிடித்தார்.

பல்வேறு ஆய்வுகளை நிகழ்த்திக் கொண்டேயிருந்தார் இவர். சோடியத்தைத் தனியே பிரித்துக் காட்டினார்; வேதியியல் உரத் தயாரிப்பில் பல சீர்திருத்தங்களைச் செய்தார். இதற்காக 1812ஆம் ஆண்டு அரசரால் ‘சர்’ பட்டம் வழங்கப் பெற்றார்.

1815ஆம் ஆண்டு 'காப்பு விளக்கு' (Safety Lamp) என்னும் ஒருவகை விளக்கைக் கண்டுபிடித்தார். இது, நிலக்கரிச் சுரங்கங்களில் தீப்பிடிக்காமல் இருக்க உதவியது. இதன் விவரமாவது:

நிலக்கரிச் சுரங்கங்களில் 'மேதேன்’ என்னும் ஒருவகை எரிவாயு மிகுந்திருக்கும். இது, தீ பட்டால் எளிதில் எரியக் கூடியது. நாம் பயன்படுத்தும் விளக்குகளை வெளிச்சத்திற்காகச் சுரங்கத்திற்குள் கொண்டு செல்லின், மேதேன் எரிவாயு தீப்பிடித்துக் கொண்டு எரியத் தொடங்கிவிடும். இதனால் சுரங்கத்தில் வெடி ஏற்பட்டுப் பலவகையான தொல்லைகள் ஏற்படுவ துண்டு.

டேவியின் திறமையை அறிந்த சுரங்க இயக்குநர்கள், மேதேன் எரிவாயு பற்றி எரியாதபடிக் காக்கும் விளக்கு ஒன்று கண்டுபிடித்துத் தருமாறு டேவியைக் கேட்டுக் கொண்டனர். டேவியும் செய்தளிப்பதாக ஏற்றுக் கொண்டார்.

டேவி எண்ணெய் விளக்குப் போலவே ஒருவித விளக்கு செய்தார். எரியும் விளக்கின் சுடரைச் சுற்றிக் கம்பி வலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/15&oldid=1203015" இலிருந்து மீள்விக்கப்பட்டது