பக்கம்:தமிழ் அங்காடி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சுந்தர சண்முகனார் 15


3. உலகைச் சுருக்கிய கருவி

அறிமுகம்

நாம் வாழும் மண்ணுலகின் சுற்றளவு, இருபத்து நான்கு ஆயிரத்து எண்ணுற்றுச் சொச்சம் கல் (மைல்) ஆகும். இந்தியாவிலிருந்து அமெரிக்கா சுமார் பத்தாயிரம் கல் (மைல்) ஆகும்.

நூற்றைம்பது ஆண்டுகட்கு முன் இந்தியரும் அமெரிக்காவில் உள்ள ஒருவரும் ஒருவர்க் கொருவர் நேரில் பேசிக் கொள்ள வேண்டுமெனில், பத்தாயிரம் கல் (மைல்) தொலைவு பயணம் செய்ய வேண்டும். இதற்குக் காலமும் முயற்சியும் மிகவும் தேவை.

ஆனால், இன்றைக்குப் பக்கத்தில் உள்ளவரோடு பேசுவதுபோல் அமெரிக்காவில் உள்ளவரோடு பேசமுடியும். ஒருநாள் மாலை ஆறு மணிக்குச் சென்னையில் இருந்து கொண்டு அமெரிக்காவில் உள்ள ஒருவரோடு பேசிக் கொண்டிருந்த போது, இப்போது அமெரிக்காவில் மணி எத்தனை என்று கேட்க, இப்போது அமெரிக்காவில் காலை எட்டு மணி என்ற பதில் வந்தது. காலமும் தொலைவும் வெல்லப் பட்டன. உலகம் சுருங்கி விட்டது.

இவ்வாறு, தொலைவில் உள்ளவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ள உதவும் கருவியின் பெயர் ஆங்கிலத்தில் Telephone - தமிழில் தொலைபேசி ஆகும்.

இப்போது, ஓர் அறையில் இருப்பவரும் பக்கத்து

அறையில் இருப்பவரும் இருந்த படியே பேசிக் கொள்ளும் அளவுக்கு இந்தக் கருவி எளிமையாய் விட்டது. எழுந்து போகும் முயற்சியும் காலமும் இதனால் குறைகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/17&oldid=1203021" இலிருந்து மீள்விக்கப்பட்டது