பக்கம்:தமிழ் அங்காடி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார் 17


தொடங்கியது. கல்வி கற்றால் மட்டும் போதாது - அதன் விளைவை உலகிற்குப் பயன்படச் செய்ய வேண்டும்.

பகலிலே ஓரிடத்தில் தொழிலில் ஈடுபட்டிருந்த பலர் இரவிலே தம் வீட்டில் இருந்து கொண்டு அயராமல் ஓயாமல் ஆராய்ச்சித் துறையில் ஈடுபட்டு உழைத்து உண்டாக்கித் தந்த விளைச்சலை உலகம் நுகர்ந்து வருகிறது. இந்த விதமான முயற்சியை மேற்கொண்டு கிரகாம்பெல் செயலாற்றினார்.

ஆய்வு

அழகிய ஒரு மயில் ஆடுவதைக் கண்டால் ஓவியப் புலவன் ஓவியம் தீட்டுவான்; காவியப் புலவன் கவிதை படைப்பான். ஒருவர் வீணையை மீட்டி ஒலி எழுப்பின், அந்த ஒலியைப் பொது மக்கள் கேட்டுச் சுவைத்து மகிழ்வர். அத்தகைய ஒலியை அறிவியல் அறிஞர் கிரகாம் கேட்டதும் ஆராய்ச்சியில் ஆழ்ந்தார். வீணையில் எழும் அதிர்வுகள் ஒலி அலைகளாக மாறிக் கேட்பவரின் காதுகளை இனிக்கச் செய்வதை அறிந்தார். அதன் அடிப்படையில் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.

கிரகாம் தமக்குத் துணையாகத் தாமஸ் வாட்சன் (Thomas Watson) என்னும் அறிஞரையும் துணைக்குச் சேர்த்துக் கொண்டார். துணையாளரின் ஒத்துழைப்புடன் ஆராய்ச்சி முயற்சி வெற்றி இலக்கை நெருங்கிக் கொண்டிருந்தது. ஒருநாள் இருவரும் எட்டியுள்ள தனித்தனி அறையில் இருந்தனர். வாட்சன் ஒர் ஒலி எழுப்பினார். இதை ஒரு கருவி மூலம் கிரகாம் கேட்டு மகிழ்ச்சியடைந்தார். ஆய்வு தொடர்ந்தது.

அப்போது தொலைபேசி உருவாகி விட்டது. 1876 மார்ச் 10ஆம் நாள் வாட்சனும் கிரகாம் பெல்லும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/19&oldid=1203029" இலிருந்து மீள்விக்கப்பட்டது