பக்கம்:தமிழ் அங்காடி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32  தமிழ் அங்காடி


பதற்கு உரிய காரணத்தைக் கண்டு பிடித்தார். மற்றும், இசைக் கருவிகளில் பலவித ஒலிகள் தோன்றுவதற்கு உரிய அடிப்படை பற்றியும் ஆய்வு செய்து அறிவித்தார். ஆக, ஒளி ஆய்வு, ஒலி ஆய்வு இரண்டிலும் இராமன் ஈடுபாடு கொண்டு இருந்தார் என்பது புலனாகும்.

விருதுகள்

இத்தகைய மாமேதைக்குப் பல இடங்களிலுமிருந்து பரிசுகளும் பாராட்டுகளும் வந்து குவிந்தன. 1929 ஆம் ஆண்டு ‘சர்’ என்னும் பட்டம் பெற்றார். இது ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் வழங்கப் பெற்ற ஓர் உயரிய பட்டமாகும்.

1930-ஆம் ஆண்டு இராமனுக்கு நோபல் பரிசு கிடைத்தது. இது உலகில் மிகச் சிறந்த பெரிய பாராட்டுப் பரிசாகும். ஒவ்வோர் ஆண்டும் பல துறைகளில் சிறந்த ஆய்வு செய்து வெற்றி கண்டவர்கட்கு இந்தப் பரிசு வழங்கப்படும். இலக்கியத்திற்காக நம் நாட்டு இரவீந்திர நாத் தாகூருக்கு இப்பரிசு வழங்கப்பட்டது. ஆக, இரண்டாவதாக இராமன் இப்பரிசு பெற்று இந்தியாவின் புகழொளி உலகெங்கும் வீசச் செய்தார்.

இந்தியாவும் தம் தவ மகனை மறக்கவில்லை. இந்தியாவின் மிகவும் உயரிய 'பாரத ரத்னா’ என்னும் விருது 1954 ஆம் ஆண்டு இராமனுக்கு வழங்கப் பட்டது.

1929 ஆம் ஆண்டு இந்திய விஞ்ஞான சாத்திர ஆலோசனைக் கழகக் கூட்டத்திற்குப் பொதுச் செயலாளராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1930 ஆம் ஆண்டு 'இலண்டன் ராயல் சொசைட்டி' இராமனுக்கு 'ஹயூஸ்' பதக்கம் அளித்தது. 1933 ஆம் ஆண்டில், பெங்களூரில் உள்ள இந்திய ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர் பதவி தேடி வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/34&oldid=1203063" இலிருந்து மீள்விக்கப்பட்டது