பக்கம்:தாயுமானவர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盪 6. இளமையில் வறுமை புற்றார்; இன்னல்கள் பலவும் பட்டார்: வளமிகு தமிழைக் கற்றார்: - வறுமையை வென்றார்; சான்றோர் உளம்புகழ்ந் துவந்து போற்ற உயர்நிலைப் பள்ளிக் கல்விக் களங்களில் கழகம் தம்மில் - கற்பித்தார்; உயர்ந்தார்; மூத்தார். 7. மூப்பினை அடைந்தா ரேனும், மூப்பிலா தோங்கி, ஞாலம், காப்பதோர் ஆற்றல் பெற்ற . . - கருத்தெலாம் விளக்க வல்ல நாப்பத மொழிகள் பேசி, -.... " நற்கலை ஆய்வு நூல்கள் பூப்பதற் குதவி, இன்பம் பூத்துளம் மகிழு கின்றார். 8. நகைத்திளம் முகத்தர் ஆனார்: நற்றமிழ் நூல்கள் காட்டும் அகத்திணைக் கொள்கை தந்தார்; அம்புலிப் பயணம் தந்தார்; பகைத்திறம் அழிக்க வல்ல பத்திநன்னெறிகள் ஆய்ந்து வகைப்படச் சமய நூல்கள் வழங்கினார். வள்ளல் ஆனார். 9. அன்பினால் இன்பம் காணும் ஆண்டவன் அருளில் மூழ்கி, அன்பினால் தொண்டு செய்த ஆடியவர் தம்மைப் போற்றி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/12&oldid=892109" இலிருந்து மீள்விக்கப்பட்டது