பக்கம்:தாயுமானவர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. பிறப்பும் வளர்ப்பும் தமிழகத்தில் ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு சான் றோர் தோன்றி உலகிற்குப் பெரு நன்மை விளைவித்துள்ள னர். சங்ககாலச் சான்றோர்கள், பின்னர் தோன்றிய பொய்யா மொழியின் ஆசிரியர் வள்ளுவர், பெருந்தகை மொழிக்கு மொழி தித்திக்கும் தேவாரம் அருளிய மூவர் முதலிகள், கல்லையும் கனிவிக்கும் திருவாசகம் அருளிய மணிவாசகர், ஆரா அமுதமாய் இனிக்கும் அருளிச் செயல்களை வழங்கிய ஆழ்வார் பெருமக்கள், ஒடும் செம்பொனும் ஒக்கவே நோக் கும் திருத்தொண்டர் களின் வரலாற்றை அளித்த சேக்கிழார் பெருமான், கற்றோர் இதயத்தைக் களிப்பிக்கும் (இராமன் திருக்கதையைக்) காவியமாக்கித் தந்த கம்பநாடன் முதலி யோர் நம் நினைவிற்கு வருவர். இங்ங்னமே சமயத்துறையில் மிக்க ஈடுபாடு கொண்டு இன்சுவை ததும்பும் அமுதப் பாடல் களை அருளிய தாயுமான அடிகள் என்னும் சிவாநுபூதிப் பெருஞ்செல்வரும் இத்தகைய சான்றோர்களில் ஒருவராகத் திகழ்கின்றார். இவர் எவ்வுயிரையும் தம்முயிர்போல் எண்ணி இரங்கும் அருள் ஒழுக்கத்தை உலகோர்க்குரைப்பதில் ஒப் பற்ற ஆர்வமுடையவர். தாழ்வெனும் தலைமையில் தலை சான்றவர். உலகினர் யாவரும் மெய்ந்நெறியைக் கடைப்பி டித்து அகண்டகாரச் சிவத்தைத் துயக்கும் வண்ணம் கூவும் கருணை முகிலனைய பேரறிவாளர். இவர்தம் வாழ்க்கை வரலாறும், இவர் வழங்கியுள்ள அருளிச் செயல்களின் இயல் பும் இச்சிறு நூலில் நுவலப் பெறுகின்றன. பெற்றோர்கள்: சோழநாட்டில வேதாரண்யம் என வழங் கும் திருமறைக்காடு என்பது ஒரு சிறந்த திருத்தலம். வேதங் கள் பூசித்து மூடி விட்டுப் போயிருந்த கதவுகளை அப்பர் பெருமான் தமது அருந்தமிழால் திறந்தும், காழிவேந்தர் தமது நற்றமிழால் அடைத்தும் முன்னைய நிலைமையை உண்டாக் கிய அற்புதம் நிகழ்ந்த தலம். தமிழ் மொழியிலுள்ள பாக னைய தேவாரம் வடமொழி வேதத்திற்குச் சிறிதும் தாழ்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/21&oldid=892208" இலிருந்து மீள்விக்கப்பட்டது