பக்கம்:தாயுமானவர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

令 6 哆 தாயுமானவர் எனவே, பெரியார்களை எதிர்ப்படும் போதெல்லாம் தாயுமானவர் தத்துவ ஆராய்ச்சி பற்றியே அளவளாவி வந் தார். ஞானதாகம் உடையவராய் இருந்து வந்தமை, 'தாகமறிந் தின்பநிட்டை தாராயேல் ஆகெடுவேன் தேகம் விழுந்திடினென் செய்வேன் பராபரமே' என்பதனாலும், 'பாராயோ என்னைமுகம் பார்த்தொருகால் என்கவலை தீராயோ வாய்திறந்து செப்பாய் பராபரமே' என்பதனாலும் தெளியப்படும். அருளையே வடிவாகவுடைய அடிகள் இறைவன் தம்மை இளமையிலேயே பேரின்பப் பித்துக் கொள்ளும்படி செய்துவிட்டார் என்கின்றார். இதனை, 'அன்பின்வழி அறியாத என்னைத் தொடர்ந்தென்னை அறியாத பக்கு வத்தே ஆசைப் பெருக்கைப் பெருக்கிக் கொடுத்துநான் அற்றேன் அலந்தேன் என என்புலன் மயங்கவே பித்தேற்றி விட்டாய்' என்ற பாடற்பகுதியால் அறியலாம். 9. பராபரம் - 24 10. மேலது - 28 11. சுகவாரி - 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/26&oldid=892263" இலிருந்து மீள்விக்கப்பட்டது