பக்கம்:தாயுமானவர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. குருவருள் பெற்றமை ஒரு சாதாரண உண்மையைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். பிறவியிலேயே ஒருவனுக்குக் கண்ணில்லை. மணிமந்திர ஒளடதங்களால், அறுவை சிகிச்சையால், அவ னுக்குக் கண் கிடைக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். பொருள்களைக் காணும் நிலை அவனுக்கு ஏற்பட்டு விடுகின் றது. ஆனால், அவன் காணும் பொருள்களை இன்னவை என்று இனங்கண்டு உணர்ந்து கொள்ளும் ஆற்றல் அவனி டம் இல்லை. பிறவியிலேயே கண்ணுடையான் ஒருவன் பொருள்களை அவனுக்கு இஃது இன்னது, இஃது இன்ன து' என்று அறிவித்தால்தான் அவனால் பொருள்களை இனங் கண்டு பாகுபாடு செய்து அறிந்து கொள்ள முடிகின்றது. இவைபோலவே ஆணவ மலம்' பரிபாகமாகிச் சத்தி நிபாதம்" வருமாயின் தவம் புரியும் நிலை வாய்க்குமே யன்றித் தவமும் ஞானமும் கிடைத்துவிட வாய்ப்பில்லை. குருவருளால்தான் அவை கிடைக்க வேண்டும். இதற்கு இறைவன் திருவருளும் வேண்டும். சமயக்குரவர்களின் வாழ்க்கையைக் கூர்ந்து நோக்குங் கால் அவர்கட்குக் குருவருள் திருவருளால் கிடைத்தமை கண்டு தெளியலாம். அப்பர், சம்பந்தர், சுந்தரர் இவர்கட்கு இறைவன் திருவருளே நேரில் கிடைத்தது. அப்பருக்கு நல் லூர்ப் பெருமான் திருவடி தீட்சை நல்கினார். நினைந்துருகும் அடியாரை (6.14) என்ற முதற் குறிப்புடைய திருத்தாண்டகத் தில் 'திருவடி என் தலைமேல் வைத்தார்' என்று பாடல் தோறும் வரும் சொற்றொடரால் இஃது அறியப்படும். சம்பந் தருக்கு சிவஞானம் அம்பிகையின் முலைப்பால் உண்டதால் 1. ஆணவ மலம்: மும்மலங்களாகிய ஆணவம், கன்மம், மாயை என்பவற்றின் தலையாயது 2. சத்தி திபாதம்: திரோதான சக்தி அருட்சக்தியாக மாறி ஆன்மாவினிடத்தில் பதிதலே சத்தி திபாதம் என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/27&oldid=892274" இலிருந்து மீள்விக்கப்பட்டது