பக்கம்:தாயுமானவர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

جه ఈ్శః 8 够 கிடைத்தது. சுந்தரரை இறைவனே தடுத்தாட் கொண்டார். மாணிக்கவாசகரைத் திருப்பெருந்துறை இறைவன் குருந்த மரத்தடியில் சிவனடியார்களாகிய மாணாக்கர்கட்கு நடுவே ஆசாரியனாக இருந்து ஆட்கொண்டதாக வரலாறு கூறுகின் றது. திருவெண்ணெய் நல்லூரில் சுவேதவனப் பெருமாள்' என்ற பிள்ளைத் திருநாமத்துடன் எழுந்தருளியிருந்த மெய் கண்டாருக்கு வான்வழியாகச் சென்ற பரஞ்சோதி மாமுனிகள் உபதேசித்துச் சென்றார் என்பதை அறிகின்றோம். குரு தரிசனம்: தாயுமான அடிகள் எத்தனையோ நாட்கள் குருவை நாடி அலைந்தவண்ணம் இருந்தார். 'எந்தநாள் கருனைக் குரித்தாகு நாளெனவும் என்னிதயம் எனைவாட்டுதே' என்பதனாலும், தேடினேன் திக்கனைத்தும் தென்டனிட்டேன்; சிந்தைநைந்து வாடினேன் என்மயக்கம் மாற்றாய்; பராபரமே” என்பதனாலும் இதனை அறியலாம். திருச்சிராப்பள்ளிக் குன்றின் படிவழிப் பாங்கரில் சாரமா முனிவர் மடாலயம் என்ற பெயரில் ஒரு மடாலயம் உண்டு. இந்தச் சாரமா முனிவர் யார்? இவர் நந்திதேவரின் மாணாக்க ராய்க் கயிலையினின்றும் தமிழ்நாடு போந்து தங்கியருளிய திருமூல நாயனாரது மரபில் வந்தவர். இவர் திருச்சிராப்பள்ளி யில் அமர்ந்து ஞான ஒளி பரப்பி வந்த இடம்தான் இவர் பெயரில் வழங்கும் மடாலயம். இந்தப் பெரியவர் சமாதி கூடிப் பரிபூரணம் எய்திய இடத்தில் ஆறுமுகக் கடவுள் திருக்கோயில் ஒன்று நிறுவப் பெற்றுள்ளது. இதனை இன் றும் காணலாம். இம்முனிவருக்குப் பின் வழிவழியாகப் பல முனிவர்கள் இத்திருமடத்தில் எழுந்தருளியிருந்து பக்குவிகள் பலருக்கு 3. சுகவாரி - 11 4. பராபரம் - 200

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/28&oldid=892285" இலிருந்து மீள்விக்கப்பட்டது