பக்கம்:தாயுமானவர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iO 令 3. 4s 杂 தாயுமானவர் சுவாமிகள் அப்பொழுது தமது திருக்கையில் சிவஞான சித்தியார்’ என்ற நூலை வைத்திருந்தனர் எனவும், அதன் எட்டாம் சூத்திரம் முப்பதாம் பாடலின் முற்பாதியைத் தாயுமான வர்க்கு ஒதி அவருக்கு மெய்ந்நூல் தெளிவினை அருளினர் எனவும் செவிவழிச் செய்தி ஒனறு வழங்கி வருகின்றது. இச்செய்தியை அரண் செய்வதுபோல், "பாதிவிருத் தத்தால்இப் பார்விருத்த மாகஉண்மை சாதித்தார் பொன்னடியைத் தான்பணிவ தெந்நாளோ?' என்ற பாடலும் அமைந்துள்ளது. மாணிக்கவாசகருக்குப் பக்குவம் அடைந்த நிலையில் இறைவன் குருந்த மரத்தடியில் குருவாக நின்று ஆட்கொண் டது போல், இறைவனும் பெரியோரை அதிட்டித்து ஆசா னாய் அருள் புரிவான் ஆதலின், அவன் மெளனகுரு வாயி லாகத் தாயுமானவருக்கு உயர்ந்த ஞானத்தை நல்கினன் என்று கருதலாம். அக்காலத்தில் தருமையாதீனத்தில் யோகப் பயிற்சி சிறப்புற்று விளங்கியது. இதனை அவ்விடத்தில் யோகம் செய்வார்க்கென வகுத்திருந்த பதினாறு அறைகளின் அமைப்பால் தெளியலாம். கி.பி.1685 முதல் திருச்சியிலுள்ள 'சாரமாமுனிவர் மடம்’ தருமையாதீனத்தைச் சார்ந்ததென்பது தெளிவு. ஆதி மெளன குருவுக்குச் சிதம்பரநாதத் தம்பிரான் என்ற பெயர் அமைந்தி ருந்தது. இஃது அம்மடத்து ஆதிப் பட்டயங்களால் உறுதிப்ப டுகின்றது. இன்றும் அங்கே வதியும் தருமையாதீனத் தம்பி ரான்மார்கள் மெளனம் என்ற அடைமொழியோடுதான் தங் கள் திருப்பெயரைச் சேர்த்தே கையெழுத்திடுகின்றனர். 'மூலன் மரபு என்பது, சாரமாமுனிவர் திருமூலர் மரபில் வந்தவரென்றோ, எவற்றிற்கும் மூலமாகிய தென்முகத்தெய் வப் பரமாச்சாரியர் மரபென்றோ குறிப்பதாகக் கொள்ளலாம். 5. மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கில் ஒன்று. சிவஞானபோதத்தின் விரிவு இது. 6. எந்நாட்கண்ணி - 16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/30&oldid=892308" இலிருந்து மீள்விக்கப்பட்டது